இன்றைய ராசி பலன் – 27-3-2020

rasi palan - 27-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பிரயாணங்கள் உண்டாகும். பயணங்களால் நன்மை கிடைக்கும் என்பதால் தைரியமாக பயணங்களை மேற்கொள்ளலாம். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வார்கள். பலருக்கு பிரயாணம் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் வார்த்தையில் நிதானம் தேவை. குடும்பத்தில் உள்ள பெரியவர்களை அனுசரித்து செல்லவும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். திறம்பட சமாளிக்க நிர்வாகத்தில் நம்பிக்கையை பெற்று கொள்வீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலுக்கு தேவையான முதலீடுகளைப் எதிர்பாரா தனவரவு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். அரசு தொடர்பான வேலைகள் சற்று காலதாமதமாக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் மிகச் சிறந்ததொரு நாளாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உயர் கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஆகும் வாய்ப்புகள் உள்ளது. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல்நலம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு நிலை அதிகமாக இருக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நல்ல நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் உறவை நன்றாக இருந்து வரும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள் மனநிம்மதி கிடைக்கும். எதிலும் நிதானமாக இருப்பது மிகவும் முக்கியம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நல்ல நாளாக அமையும். புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். பெண்களுக்கு ஏற்ற மிகு நாளாக அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஒருசிலர் புதிய மொபைல் போன் வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் இருப்பார்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். தனவரவு உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களின் உதவியும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் சுபகாரிய முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். திடீரென உணர்ச்சிவசப்படக் கூடிய பல சூழ்நிலைகள் உண்டாகும். பொறுமையைக் கைக் கொள்ளவும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு கூடுதல் ஆகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் நல்ல நாளாக அமையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போனாலும் உத்தியோகத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். அல்சர் தொடர்பான கோளாறுகள் மூட்டுவலி தொடர்பான பிரச்சினைகளை உள்ளவர்களும் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உருவாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. கணவன் மனைவி உறவு அன்பு உடையதாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. எதிரிகளால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -