இன்றைய ராசி பலன் – 27-4-2020

rasi palan - 27-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக இருக்கும். சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்து வரும். எதிர்பாராத தனவரவு சற்று தாமதம் ஆகும் வாய்ப்புக்கள் உண்டு. கணவன் மனைவி உறவில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. உடல் நலம் சீராக இருந்துவரும். புது தொழில் முயற்சிகள் புது ஒப்பந்தங்கள் போன்றவற்றை இன்றைய நாளில் தவிர்ப்பது மிகவும் நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாகவே அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிணைப்புகள் வந்து செல்லும். செய்யும் தொழிலில் கூடுதல் கவனம் மிகவும் நல்லது. உடல் நலம் சீராக இருந்துவரும். படிப்பில் கூடுதல் கவனம் தேவை. உடல் சோர்வு மற்றும் அசதி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சரியான அளவில் ஓய்வு எடுத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பிரச்சனைகள் வந்து நீங்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம். தனவரவு உண்டு. கல்வியில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவினங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. வேலை வாய்ப்புத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவி உறவு நிலை சமமாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகபட்ச அலைச்சல்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி உறவு நிலை சிறுசிறு பிணைப்புகள் ஏற்பட்டு நீங்கும். பிரயாணங்களை திட்டமிடுவீர்கள். வெளியூர் வாசம் அல்லது வெளிநாடு செல்வது சம்பந்தமான சிந்தனைகளிலும் செயல்களிலும் ஈடுபடுவீர்கள். தனவரவு உடைய நாளாக இன்று அமையும். உடல்நலம் நன்றாக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி உறவு நிலை மேம்படும். புதிய ஆன்மீக எண்ணங்களுக்கு திட்டமிடுவீர்கள். உறவினர்கள் நண்பர்களால் செலவினங்கள் உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் நன்மையில் முடியும். கோபத்தை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பெண் குழந்தைகளின் கல்வி மேம்படும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாக அமையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் பெறுவீர்கள். எதிர்பார்த்த தன வரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறையும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். சொத்துக்கள் வாங்கவும் விற்கவும் முயற்சி செய்வீர்கள். ஒரு சிலருக்கு லேசான தலைவலி வந்து நீங்கும். கல்வியில் கவனம் தேவை. மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உயர்கல்வி படிப்பில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானமாக இருப்பது மிகவும் நல்லது. பேச்சை குறைத்து பேசுவதால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சமமான நாளாகவே இருக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு பற்றாக்குறை இருந்து வரும். சந்தோஷமும் நிம்மதியும் குடும்பத்தில் நிலவும். கல்வியில் சற்று கூடுதலான கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும் வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில் இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இன்றைய நாளில் எதிலும் நிதானம் தேவை. குறிப்பாக குடும்பத்தில் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. புதுயுகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் பிரயாணங்களை பற்றி குறிப்பாக தொழில் சார்ந்த பிரயாணங்களை பற்றி சிந்திப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை ஆக இருப்பது மிகவும் நல்லது. தாயின் உறவினர்களால் சில சங்கடங்கள் வந்து நீங்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மீகம் சிந்தனைகள் அதிகமாகவும். குடும்பத்தில் வாக்குவாதங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக இருந்து வரும். சொந்தத் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. நாளின் பிற்பகுதியில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் உண்டாகும். பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் நன்மையை தரும் நாளாக அமையும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் அதிகரிக்கக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி அன்பாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும். செய்தொழில் மேம்படும் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான செய்திகள் வந்துசேரும். தாய் வழி சொந்தம் வகையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பேச்சில் நிதானமாக பேசுவது மிகவும் நல்லது. பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக முடிவடையும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பான கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் ஒற்றுமை ஏற்படும். மாணவர்களின் கல்வி படிப்பில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. பொது வேலை வாய்ப்பை எதிர்நோக்கி அவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். சுப காரியங்களைப் பற்றி பேச்சு வார்த்தைகள் நடக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். ஆன்மீக வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்கள் கல்வியில் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.