இன்றைய ராசிபலன் 28-05-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. உங்களுடைய பொருளாதார பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சொந்த வியாபாரத்தில் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் உடன் பணிபுரிபவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. மன தைரியத்தோடு செயல்பட்டு எடுத்த காரியத்தை வெற்றியாக முடிப்பீர்கள். அலுவலகப் பணியில் உங்களது திறமையை வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டது. தைரியத்தோடு செயல்படலாம். சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றம் உண்டு. உறவினர்களின் அருமை பெருமைகளை புரிந்து கொள்வீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுக்களை இன்று தொடங்கலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு பிரச்சனைக்கு இன்று ஒரு நல்ல வழி கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளை கையாண்டு அதிகமான லாபத்தை பெறுவீர்கள். சுய சிந்தனை அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. யாரையும் நம்பி எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசி விடாதீர்கள். சில பேரிடம் சில விஷயங்களைச் சொல்லாமல் இருப்பது நல்லது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலதிகாரிகளிடம் வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். சொந்த தொழிலில், பங்குதாரர்களிடம் பண பரிமாற்றத்தில் அதிக கவனம் தேவை. அதிகப்படியாக பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சுமாரான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால், அனாவசியமான பேச்சை தவிர்த்துக் கொள்வது நல்லது. அலுவலக பணியில் அதிக கவனம் எடுத்து உங்களது வேலைகளை முடிக்க வேண்டும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. பயணத்தின்போது கவனம் தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. வீட்டிற்கு தேவையான, புதியதாக ஆடம்பரப் பொருட்களை வாங்குவதாக இருந்தால், இன்று வாங்கலாம். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். பல நாள் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுடைய உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மனநிறைவான நாளாக பிறக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த ஒருவரை சந்திக்கலாம். அதன்மூலம் மன நிறைவு ஏற்படலாம். உற்சாகமான மனநிலையில் நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியடையும். சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாகத்தான் பிறக்கப் போகின்றது. பயணங்களில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் யாரையும் நம்பி எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களது வேலைகளை நீங்களே செய்து கொள்வது உத்தமம்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு நேற்றைய பிரச்சினைக்கான தீர்வு இன்று கட்டாயம் கிடைத்துவிடும். மனக்குழப்பம் நீங்கி தெளிவான செயல்படுவீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி அடையலாம். நிதானத்தோடு செயல்பட வேண்டும். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். அலுவலகப் பணியில் அனுசரித்துச் சென்றால் பல காரியங்களில் சாதித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதெல்லாம் வெற்றிதான். எந்த ஒரு செயலையும் புதியதாக தொடங்கலாம். தோல்வி அடைந்தாலும், அதை வெற்றி படியில் ஏற்றும் சூட்சமம் உங்களுக்கு தெரியும். அலுவலகப் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, நல்ல பெயர் வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அனாவசிய பேச்சு மட்டும் சற்று குறைத்துக் கொண்டால் பிரச்சினைகள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக தான் பிறக்கப் போகின்றது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் சென்றால், இன்று எந்த பிரச்சனையும் ஏற்படாது. மனக் குழப்பத்தோடு எந்த ஒரு செயல்பாட்டையும் தொடங்க வேண்டாம். தெளிவான சிந்தனையை வெற்றி தரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மனக்குழப்பம் நீங்க இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்கள் கோபத்தை சற்று குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் தேவை. அலுவலக பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் நீங்கள் எங்கேயோ சென்று விடுவீர்கள். பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று நிற்கவேண்டாம். நாலு பேர் செல்லும் பாதையில், நீங்கள் செல்வது மிகவும் நல்லது. உங்களுக்கென்று தனி பாதையை அமைத்துக் கொள்ள பார்க்காதீர்கள்.