இன்றைய ராசி பலன் – 28-07-2020

rasi palan - 28-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்வில் புதிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக அமையும். பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கருட பகவானை வணங்கி வர குழப்பங்கள் அகலும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த காரியங்களை நினைத்தபடியே முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நவக்கிரக சிறப்பு வழிபாடு தொழிலும் குடும்பத்திலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்பு மிக்க நாளாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.கடன் பிரச்சினைகள் தீரும். ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருப்பது நல்லது. நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. அம்மன் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு என்று என்னால் புதிய ஒரு உத்வேகத்தை தரக்கூடிய நாளாக இருக்கும். நினைத்ததை நிறைவேற்றக்கூடிய பற்றும் மிகுந்த நாளாக அமையும். நிலவிவந்த மன சஞ்சலங்கள் விலகி மன அமைதி கிடைக்கும். வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசஞ்சலங்கள் முக்கிய நாளாக அமையும். கடன் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகள் குறையும். பொருட்களைக் கையாள்வதில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். விநாயகர் வழிபாடு மன அமைதியை உருவாக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபநிகழ்ச்சிகளை நிறைந்த நாளாக அமையும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். மாணவர்கள் தங்களது துறையில் கவனத்துடன் இருப்பது நல்லது. மனைவி பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை. பெருந்தேவி தாயார்க்கு சிறப்பு வழிபாடு செய்ய நல்ல பலனை பெறலாம்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக அமைய வாய்ப்புண்டு. அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. பணவிஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. சிவபெருமான் வழிபாடு நிலையான லாபத்தை தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரிய தடைகளை உடைய நாளாக அமையும்.தங்களின் தைரியத்தால் தடைகளை தாண்டி வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் சூழல் உருவாகும். குடும்பத்தினரிடையே அந்தோனியும் மேலோங்கும். சக ஊழியர்களின் ஆதரவு அதிகரிக்கும். அங்காரகனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர குறைகள் விலகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரிய தடைகளை ஏற்படுத்த கூடிய நாடாக இருக்கும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். பண வரவு செலவில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் ஆதரவைப் பெறுவீர்கள். புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளன. கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபிட்சமான நாளாக இருக்கும். தடைப்பட்டிருந்த காரியங்களை முடிப்பீர்கள். திருமண தடைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உருவாகும். நண்பர்கள் வழியே ஆதாயம் காண்பீர்கள். வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. காளியம்மனை வணங்கிவர தன்னம்பிக்கையையும் சிறப்பும் பெறுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோசமாக நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்பார்த்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. ஸ்ரீதேவி தாயாருக்கு சிறப்பு வழிபாடு செய்து வர குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். அலுவலகத்தில் பணியாற்று பவர்கள் சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் உருவாகும். காமாட்சி அம்மனை வழிபட்டு வர இல்லத்தில் சுபம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.