இன்றைய ராசி பலன் – 28-1-2021

rasi palan - 28-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சாமர்த்தியமாக சமாளித்து குடும்ப தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் கடினமாக உழைக்கக் கூடிய நாளாக அமையும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் சவால்களை வெற்றி கொள்வதற்கு மனதில் தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் பணிச்சுமையை அதிகரிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் முன்னேற கூடிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் இருந்த நீங்கள் திடீரென உற்சாகமடைந்து காணப்படுவீர்கள். எதிர்பாராத தனவரவு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு குறையக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் குழப்பங்கள் நீங்கி புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் அமையும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் பணிச்சுமை காரணமாக மற்றவர்கள் இடத்தில் எரிந்து விழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் மிகவும் நல்லது. குடும்பத்திலும் குழப்பங்கள் அதிகரிக்காமல் இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். சண்டை சச்சரவுகளைத் தவிர்த்து பொறுமையை கடைபிடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள். உங்களுடைய இரக்க சுபாவம் அனுகூலமான பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கடமை உணர்வு அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் பிரிவை உண்டாக்கும். குடும்பத்தில் இருக்கும் மூத்த நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் பொறுப்புடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு சிறப்பாக அமைய இருக்கிறது. நீண்டநாள் பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகளும் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவும் உற்சாகத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டி பொறாமைகள் குறைந்து காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பண ரீதியான விஷயத்தில் கவனம் தேவை.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்புடைய விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக அமையும். நீங்கள் நீண்ட நாள் சரியா தவறா என்று நினைத்துக்கொண்டிருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான சிந்தனை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தவர்களை அனுசரித்து செல்லும் உங்களுடைய குணநலன் முன்னேற்றத்தை கொடுக்கும். சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடிய முயற்சிகளை நோக்கிய பயணத்தில் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். அப்படி கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் உண்டாகும். அவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாக சந்தர்ப்பங்கள் அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்