இன்றைய ராசி பலன் – 28-1-2020

rasi palan - 28-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்களினால் பிரச்சினைகள் உருவாகி மறையும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். சுய தொழில் புரிவோருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வாகன யோகம் அமையப் பெறும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்னோன்யம் அதிகாரிக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. விநாயகரை வழிபடுவது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அமையப் பெறும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆரோக்கிய பிரச்சனைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம் இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகி மறையும். குடும்ப நபர்களிடம் பொறுமையை கையாள்வது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உயர்கல்வி பயில்வோர்க்கு முன்னேற்றம் உண்டு.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு வீண் அலைச்சல் உருவாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் இருப்பார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளால் வளமான எதிர்காலம் அமையும். திருமணம் தொடர்பான சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு. பொருளாதார பற்றாக்குறை ஓரளவு குறையும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக மன சோர்வு உண்டாகும். ஒரு சிலர் வீண் விரயங்கள் ஏற்பட்டு விரக்தியில் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். உயர்கல்வி பயில்வோருக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மனமகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடுகளில் வசிப்போருக்கு தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இறை வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன் கிட்டும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். உயர்கல்வி பயில்வோர்க்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். சுபகாரிய செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் லாபம் காணப்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். வாகன வகையில் சில வீண் விரயங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு நல்ல தகவல் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் இருப்பீர்கள். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்குவதற்கான யோகம் அமையப் பெறும். இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சலை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் செய்வோர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் தாமதமாகலாம். குலதெய்வ வழிபாடு நல்ல பலனை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில தர்ம சங்கடங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. மாணவர்கள் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் அக்கறை கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். பைரவரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வெளிநாடு வேலைவாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படலாம். வெளிநாடுகளில் வசிப்போருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்களின் கடின முயற்சிக்கு உரிய பலன்களை பெறுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன நிம்மதி உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தாமதமின்றி நடைபெறும். மனதிற்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம் எனவே எச்சரிக்கை தேவை. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. பொருளாதார பற்றாக்குறை பிரச்சனையால் மன உளைச்சல் ஏற்படலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர் சாதகமான சூழ்நிலையில் நினைத்ததை நடத்திக் காட்டுவார்கள். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுய தொழில் புரியும் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். அரசுத்துறை விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் ஆதாயம் கிட்டும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலை உயரும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுகள் வெற்றியடையும். நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு வெற்றி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி வரும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்