இன்றைய ராசி பலன் – 28-12-2020

rasi palan - 28-12-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. அடுத்தவர்கள் பேச்சில் மூக்கை நுழைத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய வாய்ப்புகள் அமையக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டு. பண விஷயத்தில் மூன்றாம் நபர்களை நம்புவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் தரும் நாளாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் சற்று அசதியுடன் காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களிடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும் வாய்ப்புகள் உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் எதிலும் நிதானம் இருப்பது நன்மை தரும். யார் என்ன செய்தாலும் அமைதி காப்பது நன்மைகளை தேடித் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒற்றுமையுடன் செயல்பட கூடிய அற்புதமான அமைப்பு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் கிடை ப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் நுட்பமான விஷயங்களை கற்றுத் தேர்வதற்கு வாய்ப்புகள் அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான நேரத்தில் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் முயற்சிகள் அமோக வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் நடந்து கொள்வீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தில் உங்களுடைய குடும்பத்தினரின் பங்கு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். எதிர்பாராத நபர்களின் சந்திப்பும் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பெண்களுக்கு மனதிற்குப் பிடித்த வரன்கள் அமையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -