இன்றைய ராசி பலன் – 28-12-2019

rasi palan - 28-12-2019
- Advertisement -

மேஷம்:
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்காது. மிகவும் சோர்வுடன் காணப்படுவீர்கள். அதன் காரணமாக தேவையற்ற கோபங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உங்களின் கோபம் உங்க குடும்ப நபர்களை பாதிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை பளு அதிகம் இருக்கும்.

ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சேமிப்பின் அவசியத்தை உணர கூடிய நாளாக இருக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
இன்றைய தினம் உங்களுக்கு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. எனவே உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். இன்றைய நாள் உங்களுக்கு மன அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப நபர்கள் உங்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும்.

கடகம்:
இன்று உங்களுக்கு தனவரவு திருப்திகரமாக இருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கடன் கேட்டு போனாலும் கிடைக்காது. தெய்வ வழிபாடுகளில் முழு கவனத்தையும் செலுத்தி வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பதட்டமான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. எதிர்மறை எண்ணங்களை நீக்கி தெய்வ சிந்தனையில் ஈடுபட்டால் இன்றைய நாளை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். விநாயகரை வழிபடுங்கள்.

கன்னி:
இன்றைய நாள் உங்களுக்கு வீண் அலைச்சலை உருவாக்கக்கூடிய நாளாக இருக்கும். யாரிடமும் எந்த வாக்கும் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக நிற்பார்கள். கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுகிறது. குடும்பத்தில் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமுடனிருப்பது நல்லது. நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் தகுந்த பலன் கிடைக்கும்.

விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஒரு பிரச்சினை முடிந்தது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது. வேறொரு பிரச்சினை தலைதூக்கும். மிகவும் சோர்ந்து போய் விடுவீர்கள். தேவையற்ற பதட்டம் காணப்படும். மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். சிறப்பான நாளாக அமைத்துக் கொள்ள ஈசனை வழிபடுங்கள்.

தனுசு:
இன்றைய நாள் உங்களுக்கு வீண் விரையங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். அனாவசிய செலவுகளை, ஆடம்பர செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் நீங்கள் எடுக்காமல் இருப்பது சிறந்தது. உங்களின் விடா முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

மகரம்:
இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாளாக அமைய போகிறது. எந்த முடிவை நீங்கள் எடுத்தாலும் அதில் வெற்றியைக் காண்பீர்கள். நற்செய்திகள் இல்லம் தேடி வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். உங்களின் திறமையால் பல சாதனைகளை புரிய போகிறீர்கள். அதற்கான முதல் படியை எடுத்து வைப்பீர்கள். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

கும்பம்:
உங்களுக்கு இன்றைய நாள் குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் நாளாக இருக்கும். வரவு செலவுகளில் பங்கெடுத்துக் கொள்ளும் நிலை உருவாகலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளி நபர்களிடம் இருந்து கவனமுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக சிலவற்றை திட்டமிடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் குழப்பமான சூழ்நிலை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தனவரவு திருப்திகரமாக இருக்காது. உங்களின் முன்கோபத்தால் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களின் தன்னம்பிக்கையால் புதிய முயற்சிகள் செய்து முன்னேற்றம் காண்பீர்கள்.

- Advertisement -