இன்றைய ராசி பலன் – 28-3-2020

rasi palan - 28-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். குடும்பத்தில் அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடைவார்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி ஒற்றுமை சிறுசிறு பிரச்சினைகள் இருப்பின் நிம்மதி அளிப்பதாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீண் அலைச்சல்கள் தவிர்த்துக் கொள்ளவும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் இடம் மாறுதல் தொடர்பான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் முயற்சிகளை பற்றி சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் உண்டு. புதிய வாகனம் வசதிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் அழுத்தம் கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமையை நிர்வாகத்திற்கு புரிய வைக்கும் நல்ல நாளாக அமையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்ப இடமாற்றம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கடின உழைப்பை நிர்வாகம் சரியாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். கல்வியில் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். ஆராய்ச்சி படிப்பில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கல்விக்காக வெளிநாடு சென்று இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். தன வரவு உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள் உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாகும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் பலருக்குக் கிடைக்கும். ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைவீர்கள். சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இருந்து வந்த பொருளாதார பற்றாக்குறை மாறிவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதியான சூழ்நிலை காணப்படும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான அடிப்படை காரியங்கள் சிறப்பாக நடந்து முடியும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஓரளவு பற்றாக்குறை இருந்து வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி அடைவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை அளிக்க கூடிய நாளாகும். சொந்த தொழில் செய்து கொண்டிருக்கும் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். நீங்கள் எதிர்பார்த்த தன வரவும் உண்டாகும். புதியவற்றை எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான தகவல்கள் வந்து சேரும். இதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிர்வாகம் உங்களை சரியாக புரிந்துகொள்ளும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தின் நல்ல வெற்றி பெறுவார்கள். ஆரம்ப கல்வியில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் படிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மனநிம்மதி கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். வாகன வகையில் ஆதாயம் தரக்கூடிய நாளாக அமையும். பெண்களுக்கு சொத்துக்கள் வாங்குவது ஆடை ஆபரண சேர்க்கை அமைவது போன்ற நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. மாணவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கும் ஆராய்ச்சி கல்வியில் இருப்பவர்களுக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக இருந்து வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகம் பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாகும் வாய்ப்புகள் உள்ளது. பொருளாதாரத்தில் ஏற்றமிகு சூழ்நிலை இருக்கும். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் படிப்பை முடித்து தாய் நாடு திரும்புவதை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய போகிறது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும் வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் சிறிய அளவில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவார்கள். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலான வேலை பலு உண்டாகும். உடல்நலம் வயதானவர்களுக்கும் சற்று தொல்லை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வழி உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -