இன்றைய ராசி பலன் – 28-4-2020

rasi palan - 28-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. அலைச்சல் அதிகமாகும். அரசியல் மற்றும் அரசு எந்திரத்தின் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சிறிய அளவில் மன அழுத்தங்கள் வர வாய்ப்புக்கள் உண்டு. உடல் நலம் சீராக இருக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வாய்ப்புகள் உண்டு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். சொந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கு பணப் பற்றாக்குறை இருந்து வரும். சொத்து மற்றும் வாகனம் இவைகளை நோக்கிய செயல்பாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். நண்பர்கள் உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புது வேலை வாய்ப்புகள் நோக்கி செயல்படுவது வெற்றி கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சமாளிக்க கூடிய நாளாக இருக்கும். கஷ்டங்களுக்கு எல்லாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அரசு மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் எளிதில் முடியும். வரவு செலவுகள் நன்றாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான சிந்தனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தந்தையின் உடல் நலத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக இருக்கும். புது வேலை வாய்ப்பு சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். கணவன் மனைவிக்கு இடையே பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. குழந்தைகளுக்கிடையே கல்வி மேம்படும். வாகனம் தொழில் உணவுத் துறையில் உள்ளவர்களுக்கு பொருளாதார வரவு உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன வருத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையை அளிக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகை மற்றும் நண்பர்கள் வருகை உண்டு அதனால் மன மகிழ்ச்சி உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். வாகனம் வகையில் செலவினங்கள் உண்டாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்கள் கல்வி மேம்படும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற பலன் அடைவீர்கள். மனைவியோடு அன்பாக நடந்து கொள்வீர்கள். பணம் பற்றாக்குறை இருந்து வந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்கள் சற்று காலதாமதமாக நடைபெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தொல்லைகள் வர வாய்ப்புகள் அதிகம் உண்டு. குழந்தைகளால் செலவினங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே உறவு நிலையில் சற்று வாக்குவாதங்களை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழிலில் முன்னேற்றம் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். வருமுன் காப்பது நல்லது. என்பது போல மனைவி அல்லது கணவனுடன் வார்த்தை போரில் இறங்கக்கூடாது. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாள் தடைப்பட்டுவந்த காரியங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் சற்று காணப்படும். தொழில் மற்றும் வணிக ரீதியான அலைச்சல் அதிகமாக வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் சிறிய அளவில் வந்து செல்லும் வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு அவசியம். நீங்கள் செல்லும் காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். உங்கள் பேச்சில் நிதானம் தேவை. பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து வந்தாலும் அதனை சமாளித்து விடுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபசெலவுகள் தேடி வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை மேம்படும். சிலருக்கு கழுத்து மற்றும் தோள் பகுதியில் வலி வர வாய்ப்புகள் உண்டு. வாகனம் வாங்கும் யோகம் உண்டு. புதிய வேலைவாய்ப்பு நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். அரசாங்கம் வகையில் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை இனிமையாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த பணவரவு உண்டு. ஒரு சிலருக்கு கடன் அடைபடும் வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு தீர்வுக்கு வரும். நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருந்துவரும். செய் தொழிலில் வெற்றி உண்டு. அலைச்சல் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. வாகனம் மற்றும் சொத்து வகையில் ஆதாயம் உண்டு. உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில் ரீதியான எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கல்வி மேம்படும் உடல் உஷ்ணம் அதிகமாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை வலுவாக இருக்கும். வாகனம் வகையில் ஆதாயம் உண்டு. சொத்து மற்றும் வாகனம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியளிக்கும் தங்களது பேச்சில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் கூடுதலான லாபம் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. மாணவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -