இன்றைய ராசி பலன் – 28-6-2020

rasi palan - 28-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விரையம் நிறைந்த நாளாக அமையும். திலும் சிந்தித்து செயல்படுவது நல்ல முடிவை கொடுக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அக்கறை அவசியம். முருகப்பெருமானை வழிபட்டு வர உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முன்னேற்றத்துக்கான ஒரு நாளாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். நந்தி பகவானை வழிபட்டு வர நல்ல பலனை பெறலாம்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தும் நாளாக அமையும். பழைய கொடுக்கல்-வாங்கல் முடிவுக்கு வரும். தலைவலி கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்படும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். அரசாங்க பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். ள்ளைகள் வழியில் செலவுகள் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். கால பைரவரை வணங்கி வர ஆரோக்கியம் அதிகரிக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நாளாக அமையும். எதையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கால பைரவர் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தையும் தைரியமாக செய்யக் கூடிய சூழல் ஏற்படும். வயிற்றுப் மற்றும் வாய்வு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நரசிம்மனை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு கிடைக்கும் நாளாக அமையும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. நெடு நாட்கள் நீடித்த கடன் தொல்லை நீங்கும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விஷ்ணு பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை தீர்க்கும் நாளாக அமையும். மனைவி பெற்றோர்களிடம் ஆலோசித்து புதிய முதலீடு செய்வது நல்லது. சங்கடங்கள் விலகி மனநிம்மதி அடைவீர்கள். மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதை தவிர்ப்பது நல்லது. பைரவர் வழிபாடு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன அமைதியற்ற சூழல் ஏற்பட நாளாக அமையும். இல்லத்தில் சுப காரியங்கள் கை கூடி வரும். பணவரவு அதிகரிக்கும். புதிய வீடு மனை சொத்து வாங்க வாய்ப்பு உண்டாகும். பெருந்தேவித் தாயாரை வழிபட்டு வர சங்கடங்கள் தீரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபிட்சமான நாளாக அமையும். நண்பர்கள் வழியில் ஆதாயம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே நல்ல அண்பு உண்டாகும். சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்தமான சூழ்நிலை கூடிய நாளாக இருக்கும். சுயதொழில் செய்வோர் புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் ஒரு நல்ல நாளாக இருக்கும். டும்பத்தினரிடையே அனுசரித்துப் போவது நன்மை தரும். நண்பர்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படும். ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர சுபிட்சம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.