Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (29/05/2019): கொடுத்த கடன் திரும்ப வரும்.

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பிற்பகலுக்குமேல் நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

உற்சாகமான நாளாக அமையும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

மனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைந்த பொருள் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கடகம்:
Kadagam Rasi

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் நன்மை ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உற்சாகம் தருவதாக அமையும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

இன்று உற்சாகமான நாளாக இருக்கும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் சற்று கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். தாய்மாமனிடம் எதிர்பார்த்திருந்த காரியம் இன்று அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். ஒரு சிலருக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணை வழியில் ஆதாயம் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி மனம் உற்சாகமாகக் காணப்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். கடவுளின் அருளால் சிலருக்குத் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகக்கூடும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை மட்டும் தவிர்க்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

மீனம்:
meenam

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம்.வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -