இன்றைய ராசி பலன் – 29-06-2018

12-rasi

மேஷம்:

Mesham Rasi இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

ரிஷபம்:

Rishabam Rasiஎதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. என்றாலும் சக பணியாளர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதல் தரும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

மிதுனம்:

midhunamதெய்வப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

- Advertisement -

கடகம்:

Kadagam Rasiமனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

simmamஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். பிற்பகலுக்குமேல் வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

இந்த வார ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கன்னி:

Kanni Rasiசிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.

துலாம்:

Thulam Rasiதாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். காலையில் சற்று சோர்வாக இருந்தாலும், முற்பகலுக்கு மேல் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

virichigamசிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் அவசியம். உற்சாகமான சூழ்நிலையே காணப்படுகிறது. காரியங்களில் தடை ஏற்பட்டாலும், முடிவு சாதகமாகவே இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasiபுதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்:

Magaram rasiசிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். பிள்ளைகள் வகையில் பெருமைப்படக்கூடிய செய்தி கிடைக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiபெரிய மனிதர்களின் அறிமுகமும், அவர்களால் அனுகூலமும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழக்கூடும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். உற்சாகமான நாள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உயர் பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்:

meenamமனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

அனைத்து ராசிக்காரர்களுக்கும் இன்றைய ராசி பலன் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அளிப்பதாக இருக்கும் என நம்புகிறோம்.