இன்றைய ராசி பலன் – 29-07-2020

rasi palan - 29-7-2020
- Advertisement -

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரியத்தடைகள் உடைய நாளாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை தேவை. வராகி அம்மனை வழிபட்டு வர தடைகள் நீங்கும்.

ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள கூடிய நாளாக அமையும். உடல் நலத்தில் அக்கறை அவசியம். பிறரிடம் அளவாக பேசுவது நல்லது. அரசாங்கத் துறையில் பணி புரிவோருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
கருட பகவானை வணங்கிவர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் லாபம் காணும் நாளாக அமையும். பொருட்களில் கையாளுவதில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் வழியே ஆதாயம் கிடைக்கும். நவக்கிரக வழிபாடு நிலையான தன வரவுக்கு வழி வகுக்கும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக அமைய வாய்ப்புண்டு. பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவரோடு வீண் வாக்கு வாதங்கள் வேண்டாம். மாணவர்கள் தங்களின் புது புது முயற்சிகளால் வெற்றி அடைவீர்கள். சனீஸ்வர பகவான் வழிபாடு சஞ்சலங்களை போக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு அதிகரிக்க கூடிய நாளாக அமையும். எந்த காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பதால் வெற்றி காண்பீர்கள். சிறுசிறு மனக்குழப்பங்கள் வர வாய்ப்புண்டு. குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. விஷ்ணு வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். பணம் விஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பழைய சொத்துப் பிரச்சனைகள் சாதகமாகும். பெருமாளை வழிபட்டு வர தொழிலில் பிரச்சினைகள் தீரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டம் நிறைந்த நாளாக அமையும். எதிலும் நிதானத்தோடு செயல்பட்டால் நல்ல முடிவை பெறலாம். குடும்பத்தினருடன் அனுசரித்து போவது நல்லது. எதிர்பாராத கடன் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. லக்ஷ்மி தேவியை வழிபட்டு வர மனசஞ்சலங்கள் விலகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக அமையும். புதிய பொருட்களை வாங்க விற்க நல்ல நாளாக அமையும். உறவினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வாகன பயணத்தின் போது கவனம் தேவை. லட்சுமி தேவியை வணங்கி வர குறைகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். எதிர்பாராத திடீர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும். மாணவர்கள் புது முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த சலசலப்புகள் நீங்கும். சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். காளி அம்மனை வணங்கி வர வெற்றி காண்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காரியத் தடைகள் ஏற்படுத்த கூடிய நாளாக இருக்கும். சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எந்த செயலையும் குடும்பத்துடன் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மாணவர்கள் தங்கள் புது முயற்சிகளால் வெற்றி அடைவீர்கள். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ள சூழல் உருவாகும். ஐயப்பனை வணங்கி வர நன்மைகள் நடக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மிகுந்த நாளாக காணப்படும்.நீண்ட நாட்களாக நிலவி வந்த கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் உருவாகும் சூழல் உண்டாகும். மாணவர்கள் தங்களது புது திட்டங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். காமாட்சி அம்மன் வழிபாடு தொழில் முன்னேற்றம் கொடுக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு மிகுந்த நாளாக காணப்படும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள சூழ்நிலை ஏற்படும்.சுற்றத்தாரோடு மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிறருடன் அளவாகப் பேசுவது நன்மையை கொடுக்கும். விஷ்ணு பகவான் வழிபாடு தடைகளைப் போக்கி வெற்றி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -