இன்றைய ராசி பலன் – 29-09-2020

rasi palan - 29-9-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வருகை, ஆதரவு மனதிற்கு தெம்பை ஏற்படுத்தும். சொத்து ரீதியான விஷயங்களில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் யோசித்து செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய சிந்தனைகள் மேற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் கால தாமதம் ஏற்படும் என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது மந்த நிலை காணப்படும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும் என்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்தபடி வாடிக்கையாளர்கள் வெகுவாக அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். இரக்க குணமுள்ள உங்கள் ராசிக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதுள்ள அக்கறை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அமையும். இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய காரியங்கள் யாவும் வெற்றியை நோக்கி பயணிக்கும். உறவினர்களின் மற்றும் நண்பர்கள் ஆதரவு நல்ல முறையில் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியான முயற்சிகள் அமோக வெற்றி பெறும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். வாகன ரீதியான விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப காரியங்கள் கை கூட கூடிய அற்புதமான நாள். இதற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நேர்மையுடன் செயல்படுவீர்கள். தந்தைவழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் உஷ்ணம் பாதிப்புகள் குறைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பழைய கடன்கள் தடையின்றி வசூலாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரவும். அரசு வழி காரியங்கள் அனுகூலமான பலன்கள் தரும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும்.

தனுசு
தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீர கூடிய நாள். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வெளியூர் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகள் உடனான இணக்கத்தை அதிகரித்துக் கொள்வது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் தொடர்பான வேலையாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்குபவர்கள் அனுகூலமான பலன்களை பெறுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் உண்டாகலாம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பகைவர்கள் இடத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்துவது நல்லது. எதிர்பாராத பணவரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் சக பணியாளர்கள் மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -