இன்றைய ராசி பலன் – 29-1-2021

rasi palan - 29-1-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்து முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என இருப்பது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு பலிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்கு வாதங்களால் மனசஞ்சலம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு விருத்தி ஏற்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண வரவு சிறப்பாக அமையும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

சிம்மம
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் ஆதரவு மன மகிழ்வை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி ஏற்றம் பிறக்கும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் மூலம் மன அமைதி பிறக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பயணங்களில் எச்சரிக்கை வேண்டும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பது உத்தமம். சுய தொழில் புரிபவர்களுக்கு விடாமுயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் கைகூடிவரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும்.

தனுச
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனம் சிதற கூடிய வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமோகமான வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன்-மனைவி இடையே இருந்த நெருக்கம் மேலும் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் மூன்றாம் நபர்களை அனுகுவதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியம் ஒன்று நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு தேவையான நேரத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வின்றி உழைக்க கூடிய வகையில் இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வெற்றி பாதையை நோக்கி பயணத்தை செலுத்துவீர்கள். இலக்கை அடைவதில் சிக்கல்கள் இருந்தாலும் அதனை தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன்களை கொடுக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -