இன்றைய ராசி பலன் – 29-1-2020

rasi palan - 29-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதை காணப்படும். உயர்கல்வி பயில்வோர்க்கு புதிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு பின் தீர்வுக்கு வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தாமதமாக வாய்ப்புகள் உள்ளது. கடன் பிரச்சனையில் தவித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான மாற்றுப்பாதை தென்படலாம். வியாபாரத்தினால் சிலருக்கு அலைச்சல் ஏற்பட்டு சோர்வுடன் காணப்படுவீர்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிட்டும். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். வீண் விரயங்கள் உருவாகலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் செய்பவர்களுக்கு திடீர் பயணங்களால் அலைச்சல் உருவாக கூடும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். வேலைவாய்ப்பு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையப்பெறும். பெற்றோர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் கிட்டும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் தடையின்றி வெற்றி பெறும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். எனினும் நல்ல செய்திகள் வந்து சேரும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு நற்செய்தி கிட்டும். பூர்வீக சொத்துகள் மூலம் தேவையில்லாத பிரச்சனைகள் வந்து சேரலாம். ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல வெற்றிகளை தேடி தருவீர்கள். சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அமோகமான வெற்றி தரும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய்நாடு திரும்புவதில் சில பிரச்சனைகள் உண்டாகலாம்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சி பாதையில் செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழ்நிலையை தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் இருப்போர்க்கு நல்ல செய்திகள் வரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு முன்னேற்றம் காணப்படும். ஒரு சிலருக்கு சுவாச பிரச்சனைகள் மேலோங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பெண்களுக்கு வீட்டு பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி இருக்கும். சக பணியாளர்கள் மூலம் நன்மைகள் பல உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். வெளிநாடுகளில் வசிப்போர் தங்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போர்க்கு நற்செய்தி கிட்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதம் ஆகலாம். பிரயாணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உத்தியோக உயர்வை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். பொருளாதாரம் சீராக இருக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பொருளாதாரப் பற்றாக் குறைகள் இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன நிம்மதி கிட்டும். இறை வழிபாடுகளில் ஈடுபடுவது நன்மையை தரும். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும். புதிய நண்பர்களால் ஆதாயம் கிட்டும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்துடன் வெளியில் சென்று வருவதன் மூலம் மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிட்டும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிட்டும். கூட்டுத் தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உயர்கல்வி பயில்வோர் புதிய தொழில் நுட்பங்களை கற்று தேர்வதன் மூலம் பலன் அடைவார்கள். வழக்குகள் சாதகமாக அமையும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். பெண்களுக்கு வாகன வகையில் ஆதாயம் கிட்டும். பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வெளிநாட்டில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்கள் லாபகரமாக அமையும். தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்வதன் மூலம் உடல் நிலையை சீராக்கி கொள்ளலாம். வீண் விரயங்கள் ஒரு சிலருக்கு ஏற்படக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்