இன்றைய ராசி பலன் – 29-2-2020

Rasi Palan

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையப்போகிறது. குடும்பத்தில் நீங்கள் எதிர்பாராத சந்தோஷமான சூழ்நிலை நிலவும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாக அமையும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகள் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனைத்தரும். சுப பேச்சுக்கள் இந்த நாளில் தொடங்கலாம். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத நன்மைகளை தரக்கூடிய நாளாக அமைய போகிறது. இன்றைய நாள் முழுவதும் பொறுமையைக் கடைப்பிடித்து செயல்படுவது பெரிய வெற்றியை தரும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு, உடன் பணிபுரிபவர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். சுப விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அனாவசிய பேச்சைத் தவிர்க்கவும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. எதிர்பாராத பண வரவு உங்களை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் முக்கியமான முடிவுகளை மட்டும் இன்று எடுக்க வேண்டாம். சுபகாரிய பேச்சை தொடங்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் நிதானமாக யோசித்து எடுக்கவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான ஒரு செய்தி இன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நிம்மதி தரும் நாளாக அமைய போகிறது. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை சுமுகமான முடிவுக்கு வரும். குடும்பத்தில் உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பு உங்களிடத்தில் உண்டு. சொந்தத் தொழில் சற்று தடுமாற்றத்தோடு செல்லும். மாணவர்கள் படிப்பில் அக்கறையோடு செயல்படுவது நல்ல முன்னேற்றத்தை தரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்மராசிக்காரர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக அமைய போகிறது. சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். யாரையும் நம்பி கடனாக பொருட்களை விற்க வேண்டாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், உடன் பணிபுரிபவர்களிடம் அளவோடு பேசுவது நன்மை தரும். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்த ஒரு நண்பரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மேல்நோக்கு நாளாக அமைய போகிறது. உத்தியோகத்தில் எதிர்பாராத பாராட்டைப் பெறுவீர்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சம்பந்தமான பேச்சை தொடங்கினாள் வெற்றிதான். பொருளாதாரத்தில் சற்று பற்றாக்குறை ஏற்பட்டாலும் அதை சமாளித்து விடுவீர்கள். சிக்கனமாக செலவு செய்யலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. விவாதத்தை தவிர்த்தால் ஒற்றுமை ஏற்படும். உறவினர்களின் வருகையால் எதிர்பாராத செலவை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, உங்களது மேலதிகாரியிடம் மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடியும். சற்று கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் உற்சாகமான நாளாக அமைய போகிறது. குடும்பத்துடன் நேரம் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். வருமானம் சீராக இருக்கும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. சொந்தத் தொழில் எப்பவும் போல நன்றாகவே செல்லும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சுமூகமான சூழல் நிலவும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷமான நாளாக அமைய போகிறது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு வந்து சேரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களின் போது மட்டும் சற்று கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நிறைவான நாளாக அமைய போகிறது. சொந்த தொழிலில் திருப்தியான நிலை ஏற்படும். வேலைக்கு சென்று கொண்டிருப்பவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தைகள் சுபமாக நல்ல முடிவுக்கு வரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. செலவிற்கும் எந்த குறைபாடும் இருக்காது. வருமானத்தை சேமிப்பது நல்லது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வெற்றிகரமான நாளாக அமைய போகிறது. புதிய முயற்சியில் ஈடுபடலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் பேச்சை ஆலோசித்து, எதிலும் முடிவை எடுப்பது நன்மை தரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். அனாவசிய செலவை குறைத்துக் கொள்ளவும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் ஏற்றத்தைத் தரும் நாளாக அமைய போகிறது. சொந்தத் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு, நீங்களே எதிர்பாராத நல்ல பெயர் கிடைக்கப்போகிறது. ஆனால் நல்லதே நடக்கின்றது என்ற தலைக்கனத்தை மட்டும் ஏற்றிக் கொள்ள வேண்டாம். வார்த்தையில் கவனம் தேவை. அநாவசியப் பேச்சை தவிர்த்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும், அதை சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.