இன்றைய ராசி பலன் – 29-3-2020

rasi palan - 29-3-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும் திட்டமிடுவீர்கள். எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணங்கள் மனதில் எழும். இவைகளை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களுடன் ஒற்றுமை நன்றாகவே இருந்து வரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். சுபசெலவுகள் ஏற்படும். அலைச்சல்கள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். சொத்துக்கள் வாங்குவது வாகனங்கள் வாங்குவது தொடர்பான செயல்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவு உண்டாகும். நிர்வாகத்தின் நல்ல மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிறைந்திருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் மன நிம்மதி ஏற்படும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக உத்தியோகத்தில் இருப்பவர்கள் சொந்த தொழில் நோக்கி மாறுவதற்கு திட்டமிடுவார்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். படிப்பை முடித்து வேலை உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். தாங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். எதிர்பாராத பண உதவிகள் கிடைக்க கூடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வி ஏற்றம் பெறுவார்கள். முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும் என்பதால் பல புதிய கல்வி வாய்ப்புகள் உங்கள் கண் முன் ஏற்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை பளு அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். வீண் அலைச்சல்கள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் இறுதியில் ஒற்றுமையாக இருப்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் வாய்ப்புக்களை பற்றி சிந்திக்காமலும் செயல் படுத்தாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் வயதானவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறிது அலைச்சல்கள் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் இணக்கமான சூழ்நிலையை காண்பார்கள். தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பற்றி சிந்திப்பதற்கான சரியான நாளாகும். இட மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் தாங்கள் விரும்பக்கூடிய நல்லபடியாக இடமாற்றங்கள் கிடைக்கும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். பல புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். உத்யோகம் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றி அடைவார்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு சட்ட பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தீர்வுக்கு வந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஆராய்ச்சிப் படிப்பில் உள்ளவர்கள் புதிய உயரங்களை தொடுவார்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் உண்டாகும். சகோதர சகோதரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். அரசியல் தொடர்பான காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆராய்ச்சி துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பது மற்றும் தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவது போன்றவை நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் வீடு கட்டுவது போன்றவற்றைப் பற்றிய சிந்தனைகள் உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் பல முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு இன்று சரியான நாளாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகஸ்தர்களுக்கு மனநிம்மதி ஏற்படும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது ஆதாயம் பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.