இன்றைய ராசி பலன் – 29-5-2020

rasi palan - 29-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை முடிக்க கூடிய நாளாக அமையும். பிள்ளைகளால் மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு சிறுசிறு தடைகள் ஏற்படும். தெய்வத்தின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கக்கூடும். உத்தியோகத்தில் உங்கள் வருமானம் உயர வாய்ப்புகள் உள்ளது. மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாள். பிரிந்துபோன பழைய நண்பர்களை சந்திக்க நிக்கணும். தாயாரிடம் பிரச்சனைகள் ஏற்படக்கூடும் . உத்யோகத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் பங்குதாரர்களால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. புதிய வேலைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய போகிறது. பழைய பாக்கி கடன்களை சுமுகமாக பேசி வசூலிப்பீர்கள். உங்கள் பிரச்சனையை சமாளிப்பதற்கு உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். சொத்துப் பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் காரியத்தை நினைத்தபடி முடித்து விடுவீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் நிகழும். கொடுத்த கடன்கள் அனைத்தும் வந்துசேரும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திடீர் திருப்பங்கள் ஏற்படும். மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. நீங்கள் செய்யும் செயலில் தடைகள் ஏற்பட்டாலும் மனத் துணிச்சலுடன் இருப்பீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உணர்ச்சி வசப்பட்டு எந்தவித அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படுவதால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. யாரையும் எதற்காகவும் நம்பிவிட வேண்டாம். உங்களைப் பிரிந்து போன நண்பர்கள் உங்களிடம் வந்து சேரும் வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்பொழுது இங்கிதமாக பேச வேண்டும். குடும்பத்தில் உள்ள பிரச்சனை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் பிரச்சனை ஏற்படுவதால் அவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தாமதம் ஏற்பட்டாலும் அதை செய்து முடித்து விடுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தால் சிறு மனஸ்தாபம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் புது குழப்பங்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பொறுமை தேவை. வியாபாரத்தில் போட்டியாளர்கள் அதிகரிப்பதால் லாபம் குறையக்கூடும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்கள் மூலம் மதிப்பு கூடும் நாளாக அமையும். எதையும் சமாளிக்க கூடிய சாமர்த்தியம் உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த பழைய கடன் பாக்கியை சாமர்த்தியமாக வசூலிப்பீர்கள். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை விரைந்து செயல்படுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சாதித்துக் காட்டும் நாள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் மூலம் செலவுகள் அதிகரித்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்தீர்கள். நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்வது நல்லது. கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் தொழில் ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவது முக்கியத்துவம் காட்டுவீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உறவினர்களால் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உறவினர்கள் மூலம் திருமணத்திற்கு நல்ல வரன் கைகூடிவரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். குடும்பத்திலுள்ளவர்களிடம் சிறு வாக்குவாதத்தால் பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அறிவை பயன்படுத்த வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களால் கோபம் உண்டாகும். அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நண்பர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றி பெறும் நாள். சகோதரர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். திருமணம் தடை நீங்கி கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழி உறவினர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையால் கடினமான வேலையும் எளிதில் முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் பண உதவி கிடைக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டது துலங்கும் நாளாகும். உங்களை அலட்சியமாக பார்த்த உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசு உத்தியோகம் கைகூடிவரும். எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுவீர்கள். உத்தியோக வேலையில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவீர்கள். திருமணத்திற்காக காத்திருக்கும் மகளுக்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.