இன்றைய ராசி பலன் – 29-6-2020

rasi palan - 29-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை தீர்க்கும் நாளாக அமையும். கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் புரிந்து கொள்வீர்கள். உடன் பணிபுரிவோர் ரோடு அனுசரித்துப் போவது நல்லது. நவக்கிரக வழிபாடு நிலையான சந்தோசத்திற்கு வழி வகுக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக அமையும். நெடு நாட்களாக நிலவிவந்த பண பிரச்சனைகள் தீரும். பண வரவு செலவில் கவனம் தேவை. சுற்றத்தாரின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். சித்தி புத்தி விநாயகனே வழிபட்டு வர மனநிம்மதி அடைவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மிகுந்த நாளாக அமையும். திருமண தடைகள் நீங்கி இல்லத்தில் சுப நிகழ்வுகள் நிகழும். விலகிச் சென்ற உறவுகள் திரும்பி வரும். பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பெருமாளை வணங்கி வர கவலைகள் அகலும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிக உழைக்கக் கூடிய நாளாக அமையும். புது முயற்சிகளை எடுப்பதனால் வெற்றியடைவீர்கள். மாணவர்கள் புது முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சித்தி புத்தி விநாயகரை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பு மிகுந்த நாளாக அமையும். புது நட்புக்கள் வருகையால் மகிழ்ச்சி கிடைக்கும். தந்தை வழியில் ஆதாயம் காண்பீர்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. அம்மனை வழிபட்டு வர சுபம் உண்டாகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல அமோகமான நாளாக அமையும். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்பு உண்டு. விருந்தினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கணபதியை வழிபட்டு வர சங்கடங்கள் அகலும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் மிகுந்த நாளாக காணப்படும். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். அலுவலகத்தில் சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படும். கடன் சுமைகள் குறையும். மாணவர்கள் தங்களது முயற்சிகளால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சூரியன் வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் நாளாக அமையும். உறவினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வாகன பயணத்தின் போது கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே இருந்த சலசலப்புகள் நீங்கும். பெருமாளை வணங்கி வர குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் நிலவும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக நிலவி வந்த கடன் பிரச்சினைகள் தீரும். எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் உருவாகும் சூழல் உண்டாகும். பராசக்தியை வழிபட்டு வர சுபிட்சம் உண்டாகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகமாக ஏற்படும் நாளாக அமையும். சிறுசிறு மனசஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எந்த செயலையும் குடும்பத்துடன் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மாணவர்கள் தங்கள் புது முயற்சிகளால் வெற்றி அடைவீர்கள். பூதேவி அம்மனை வணங்கி வர நல்ல பலனைப் பெறுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியடையும் நாளாக இருக்கும். பணவிஷயத்தில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. ஹயக்ரீவர் வழிபாடு குடும்பத்தில் சிறப்பு உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியே மகிழ்ச்சி கிடைக்கும். வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். கருட பகவானே வணங்கி வர தடைகள் நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.