இன்றைய ராசி பலன் – 3-10-2020

rasi palan - 3-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் உதவியால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய கோணத்தில் முயற்சி செய்வீர்கள். பெண்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு இருந்தாலும் முக்கிய முடிவுகளை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலிக்கும். சக பணியாளர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் இருக்கும். சுபகாரிய முயற்சிகள் பலன் தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகமான நாளாக அமைய இருக்கிறது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட வேலைகள் முடிவுக்கு வரும். அசையும் சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களை தரும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பதுதான் நல்லது. அடுத்தவர்களின் பிரச்சனையில் மூக்கை நுழைத்தால் தேவையில்லாத வம்பு வழக்குகள் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக தலைவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பெண்களுக்கு சுயமாக முடிவெடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பலம் எது பலவீனம் எது என்பதை உணர்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்துவந்த மோதல் முடிவுக்கு வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மூத்தவர் ஆக இருந்தால் பொறுப்புடன் நடந்து கொள்வது மன அமைதியை தரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு புத்துணர்வுடன் இருக்க வைக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். பெண்ளுக்கு புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டு.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவி செய்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கப் பெறும். உங்களின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி யாக மாறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது சிறந்த பலன் தரும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த சண்டை சச்சரவுகள் ஓரளவுக்கு நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் நல்லபடியாக முடியும். எடுக்கும் முயற்சியில் தாமதம் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரவுகள் தாராளமாக இருக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் இருந்து வந்த கடன் பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சினையை சீர் செய்ய முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாட்களின் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். திடீர் தனவரவு திருப்தி தரும். எதிர்பாராத பயணங்கள் அனுகூலமான பலன்கள் உண்டு என்பதால் தாராளமாக மேற்கொள்ளலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் படிப்படியாக குறைந்துவிடும். உங்கள் திறமைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். பேச்சில் நிதானத்தை மட்டும் கடைபிடித்தால் மன அமைதி பிறக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.