இன்றைய ராசி பலன் – 3-5-2020

rasi palan - 3-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்பு கரம் நீட்டுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற நெருக்கடிகளால் மன அமைதி குறைவு ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிக்கனமாக நடந்து கொள்வது உத்தமம். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய நாளாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல பலன்களை பெறுவீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். போட்டி பொறாமைகள் மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் படிபடியாக குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்-மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிறப்பான பணவரவால் உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுடன் அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியாக உயர்வையும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படுத்தும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் சற்று குறையும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் எளிதில் கிடைக்கும். கணவன்-மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை தரும். பொருளாதார ரீதியாக இருக்கக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் கூட முழுமையாக விலகி அனுகூலங்களை அடைவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும், நெருங்கியவர்களையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைத்து பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றியை தரும். எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்-மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்-மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.