Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (30/06/2019): தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மாலையில் உறவினர் அல்லது நண்பர் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் அதனால் மனதில் உற்சாகமும் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

மிதுனம்:
midhunam

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு வரக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் உங்களைக் கடிந்துகொண்டாலும், பொறுமையுடன் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

சிம்மம்:
simmam

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் உடல் நலன் பாதிக்கப்படும். மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்

துலாம்:
Thulam Rasi

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

விருச்சிகம்:
virichigam

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படும்.மற்றவர்களால் மன அமைதி குறையக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் முக்கிய பொறுப்பு ஒன்றுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பற்றுவரவு சுமுகமாக நடைபெறும்.. பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம்.

மகரம்:
Magaram rasi

காலையில் வழக்கமான வேலைகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. பிற்பகல்வரை வேலைச் சுமை அதிகரிக்கும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய தகவல் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர்மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மீனம்:
meenam

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -