இன்றைய ராசி பலன் – 30-1-2021

rasi palan - 30-1-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற நபர்களின் அறிமுகம் பிரச்சினையை உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. சிலருக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

மிதுனம
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிம்மதி தரும் அற்புதமான அமைப்பாக உள்ளது எனினும் எதார்த்தமாக நீங்கள் செய்யும் சில விஷயங்கள் சிக்கலை ஏற்படுத்தக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு வெற்றியை தரும் வகையில் அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிச்சயம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நிதானம் அவசியம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மனக் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளித்து விடுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் மனநிம்மதி உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதற்கு சிறப்பான நாளாக இருக்கும். இறை வழிபாடுகளின் மூலம் மனநிம்மதியை காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு பெரியவர்களின் ஆதரவு உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புகழ் உண்டாகும். மச்சான் பாராட்டுகளை பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட திருமண காரியங்கள் நல்ல பலன்களைக் கொடுக்கும் வகையில் அமையப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் லாபம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடை பிடித்தால் மன அமைதி காணலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றத்தைக் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உறுப்புகள் சரியாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் மறையும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும்.

தனுச
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் இருந்த நீங்கள் தெளிவு பெறுவீர்கள். எடுத்த முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களை மீது செலுத்தும் அன்பு அதிகரிக்கும். முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் குடும்பத்தார் ஆதரவாகச் செயல்படுவார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயலாற்றக்கூடிய இனிய நாளாக அமைய போகின்றது. தந்தைவழி உறவினர்களால் அனுகூலமான பலன்களை காணலாம். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஊடல்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன்களைக் கொடுக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் தரக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருங்கிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் குறையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -