இன்றைய ராசி பலன் – 30-1-2020

rasi palan - 30-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடிவடையும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். நிர்வாகத்தில் உங்களின் திறமைக்கு உரிய பலன் கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். கூட்டுத் தொழில் முயற்சிகள் தொடங்க இருப்போருக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வீண் விரயங்களை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் உருவாகி மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகப் பெறும். நீண்ட நாட்களாக தாமதிக்கப்பட்ட சில விஷயங்கள் தடையின்றி நிறைவேறும். பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கல்வியில் அக்கறை தேவை. மாணவர்களின் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு கல்வி கிடைக்கப்பெறும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன எனவே ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் மூன்றாம் நபர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுத்துக் கொள்வது நல்லது. அரசு வழி காரியங்கள் வெற்றி பெறும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் சிக்கல் நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம், ஊதிய உயர்வு முதலியவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்று வருத்தப்பட நேரலாம். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வழக்குகள் போன்றவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மூட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது அவசியமான ஒன்றாக இருக்கும். வார்த்தைகளில் எச்சரிக்கை கொள்வது நல்லது.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது. எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளி நபர்களால் ஒரு சில சங்கடங்கள் வந்து மறையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். எதிர்பாராத தனவரவு திருப்திப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். ஒரு சிலருக்கு வெளியூர் பிரயாணங்கள் ஏற்படக்கூடும். பயணங்களால் நன்மை கிட்டும் எனவே தாராளமாக பிரயாணங்கள் மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலையில் ஏற்றம் இருக்கும். பூர்வீக சொத்துகளால் சில பிரச்சனைகள் வந்து சேரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவது தொடர்பான திட்டமிடலில் இருப்பீர்கள். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில பிரச்சனைகள் உருவாகக்கூடும். எனவே அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல நிலைக்கு செல்வதற்கான குறிப்புகள் தென்படும். அதனை பயன்படுத்தி முன்னேறலாம்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் இல்லம் நாடி வந்து சேரும். குடும்ப நபர்களிடம் தேவையற்ற கோபங்களை தவிர்த்து இன்முகத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருக்கக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் அமோக வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருக்கும். பெண்களுக்கு வீட்டுப் பொருட்கள் வாங்கி குவிக்கும் யோகம் உண்டாகும். ஒருசிலருக்கு வாகன வகையில் ஆதாயம் கிட்டும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய்நாடு திரும்புவதில் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகப் பெறும். கல்விக்காக தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உருவாகலாம். வீண் செலவுகள் ஏற்பட்டு சிறிது மன உளைச்சலைத் தரும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்திகள் கிட்டும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உயர் கல்வி பயில்பவர்கள் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்திக் கொள்வதால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகக்கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கப் பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. வெளிநாடு வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஒரு சிலருக்கு வீடு, வாகன யோகம் ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறக் கூடும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்ற நாளாக இருக்கும். பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி இடமாற்றம் நினைத்த இடத்தில் அமையப் பெறும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடலில் இருப்பீர்கள். பொருளாதாரம் பற்றிய பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். எனவே வீண் விரயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வழக்கு பிரச்சனைகள் சாதகமாக முடியும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் நுட்பங்களை கற்று தேர்வதின் மூலம் பலன் அடைவீர்கள். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். மூன்றாம் நபர்களிடமிருந்து சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளை தேவையற்ற நபர்களால் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வீடு மற்றும் வாகன வகையில் சில செலவுகள் ஏற்படக்கூடும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோர்களின் கவனம் அதிகம் இருக்க வேண்டும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். புதிய தொழில் துவங்குபவர்கள் விநாயகரை வழிபடுவதன் மூலம் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி நிலை சீராக இருக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்