இன்றைய ராசி பலன் – 30-10-2020

rasi palan - 30-10-2020
- Advertisement -

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். உங்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் மறுக்கப்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். ஆரோக்கியத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாளுவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும் நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்வீர்கள். தொழில் ரீதியான முன்னேற்றம் சறுக்கல்களை சந்தித்து பின் மறுபடியும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் கிடைக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. திடீர் தனவரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த தொகை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கடன்கள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்தாலும் சற்று எச்சரிக்கை தேவை. உடனிருப்பவர்களே உங்களை ஏமாற்ற கூடிய சூழ்நிலை இருக்கும். எதையும் ஆலோசிக்காமல் முடிவு செய்யாதீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் குடி கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. எனினும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம். உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய சலுகைகளை அறிவிப்பீர்கள். உங்களுடைய நேர்மையான குணத்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். சக்கரத்தாழ்வாரை வழிபட நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த வகையில் நன்மைகள் நடைபெறக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நேர்மையின் காரணமாக நிறைய பொறுப்புகள் உங்களுக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் திருப்பத்தைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் பெறலாம். வீட்டில் இருப்பவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல உங்களுடைய வாய் தான் உங்களுக்கு எதிரியாக மாறும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்க வேண்டிய நேரத்தில் சரியாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை முதலீடு செய்யும் முன் யோசித்து முடிவெடுப்பது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க கூடும். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கலாம். ஆரோ க்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க வீண் விரயங்கள் ஏற்படும். அம்பிகை வழிபாடு மன அமைதி தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும். உங்களை எதிர்த்துப் போராடுபவர்கள் பின் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கை ஓங்கி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் காண்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உங்களுடன் உறுதுணையாக இருப்பார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் சுயரூபம் புரியக் கூடிய வாய்ப்புகள் வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் நம்பியவர்கள் கைவிட கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. மூன்றாம் நபர்களை நம்பாமல் தன்னம்பிக்கை பலமாகக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நீடிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -