இன்றைய ராசி பலன் – 30-12-2020

rasi palan - 30-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சலுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பண ரீதியான விஷயத்தில் மற்றவர்களை நம்பாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறி, சூடு பிடிக்கத் துவங்கும். வாடிக்கையாளர்களை கவர புதிய விஷயங்களை கையாள்வது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை என்று விரக்தி அடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை நண்பர்கள் மூலம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பரபரப்புடன் செயல்படுவீர்கள். ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும், உங்களுக்கு பிடித்தமான விஷயங்களும் நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனாவசியமான வாக்குவாதங்களை தவிர்த்து வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிடிவாதம் பிடிக்காமல், விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியை கொடுக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த ஊடல்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடைச்சல் கொடுத்த சில பிரச்சனைகள் சாதுரியமான அறிவாற்றலால் முடிவுக்கு கொண்டு வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும். புதிய தொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வத்தை அதிகமாக கொண்டிருப்பீர்கள். மன அமைதி கிடைக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது உத்தமம். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ள ஆர்வம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலவீனத்தை புரிந்து கொள்ளும் அற்புதமான வாய்ப்பு அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெண்களுக்கு தங்கள் மேல் இருக்கும் சுயமதிப்பீடு மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் கைகூடி வர வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். திடீரென நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகை மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயத்தை சாதிக்க கூடிய அற்புதமான வாய்ப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை செய்வதற்கு நல்ல நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் வேலையில் குழப்பமான சூழ்நிலை நிலவும். சக பணியாளர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். உடல் உஷ்ணம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் தீர்க்கமாக ஆலோசிப்பது நல்லது. குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக்கூடிய தைரியம் அதிகரிக்கும். பெண்களுக்கு தெளிவு பிறக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தடை, தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்