இன்றைய ராசி பலன் – 30-12-2019

rasi palan - 30-12-2019

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நல்ல நாளாக இருக்கும். வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். குடும்பத்துடன் குதூகலமாக இருக்கக்கூடிய நாளாக இன்றைய நாள் அமையும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்கள் இன்றைய நாளில் மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சில தேவையற்ற குழப்பங்கள் உங்களை கஷ்டப்படுத்தும் நாளாக இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சோம்பேறித்தனமாக அமையும். சோர்வுடன் காணப்படுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக முடித்து விட திட்டமிட்டு இருப்பீர்கள். தேவையற்ற பதட்டத்தை குறைத்து சரியான திட்டமிடலுடன் செயல் ஆற்ற வேண்டிய நாள் இது.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க கூடிய நாளாக இருக்கும். உங்களது முயற்சிக்கு உரிய பலனை காணக்கூடிய நாளாக அமையும். உங்களுடைய வளர்ச்சிக்கு உங்களை புரிந்து கொண்ட நபர்கள் உறுதுணையாக நிற்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு ஏற்படக்கூடிய நாளாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உங்களின் நேர்மைக்கு தகுந்த பலன்களை நீங்கள் காணலாம். வெளியிடங்களில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. உங்களின் முயற்சிக்கு உரிய லாபம் கிட்டும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். வெளி இடத்தில் சுற்றியுள்ளவர்களின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். பணத்தை கையாள்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களின் கடின உழைப்பின் அருமையை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள். விநாயகரை வழிபடுங்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நேர்மறையான எண்ணங்கள் கொண்டு உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் பாராட்டை பெறுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சோர்வுடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் இலட்சியங்களை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரவில்லை என்று கவலை கொண்டிருப்பீர்கள். மன அமைதிக்கு அம்பிகையை வழிபடுங்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகவும் பதட்டமான நாளாக அமையும். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் அறிவாற்றலினால் பல நற்பலன்கள் கிடைக்கப்பெறும். பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடித்து விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத ஒரு நாள் நாளாக இருக்கும். திடீரென தனவரவு உண்டாகும். அதனால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாக கூடிய ஒரு நாளாக இருக்கும்.

மீனம்:
meenam
உங்களின் தன்னம்பிக்கை இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார். [ஊதிய முயற்சிகளுக்கு புதிய பாதைகள் தென்படலாம். கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படலாம். பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. ஆரோக்கியம் சீராக இருக்கும்.