இன்றைய ராசி பலன் – 30-4-2020

rasi palan - 30-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பிரயாணங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும் பிரிந்த குடும்பங்கள் ஒன்று செல்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும் நல்ல நாள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் நிற்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது சொத்துக்களும் மற்றும் எதிர்கால சேமிப்பு களுக்கான பாத்திரங்களையும் வாங்குவது போன்றவற்றில் மனமும் எண்ணமும் செல்லும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். எடுத்த பல முயற்சிகள் வெற்றியை தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மாணவர்களுக்கு மேல் நிலை ஏற்படும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக அமையும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும். தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் நன்றாக இருக்கும். புதிய படத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். எதிர்காலம் முயற்சிகளுக்கான அடித்தளமான பல வேலைகள் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஆதாயம் பெறுவீர்கள். பெண்களுக்கு இனிமையான நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். பெரியவர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. சுபகாரியங்கள் மகிழ்ச்சியை தரும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை இன்று தவிர்த்துவிடுவது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் கருத்து வேறுபாடுகளும் வீண் அலைச்சல்களும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து போகும். மனைவி வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் உண்டாக கூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் சற்று கூடுதல் கவனத்தை செலுத்துவது மிகவும் நல்லது மாணவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும். நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியை தரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக அமையும். குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும. திருமண வாய்ப்புகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சந்தோஷமாக அமையும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்களை நோக்கி வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். பிரிவினையை நோக்கி சென்று கொண்டிருக்கக்கூடிய குடும்பங்கள் தங்களுடைய எண்ணம் நிறைவேற பெறுவார்கள். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் சமமாக இருக்கும். தாயின் வார்த்தையை மதித்து நடப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். பெண்களுக்கு மிக சிறந்த நாளாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களின் வருகை மற்றும் நண்பர்களின் வருகையால் மனம் மகிழ்ச்சி உண்டாக கூடும். வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய வீட்டில் இருப்பவர்களிடம் மாற்றத்தை எதிர்நோக்கி இருந்த அவைகளின் வெற்றி பெறுவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவுவது போன்றவை இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். ஆன்மீக மகான்கள் குருமார்கள் போன்றவைகளின் தரிசனம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. கோவில்களுக்கு செல்வதன் மூலம் மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது நல்லது. பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் சிறப்பாக எதிர்கொண்டு முன்னேறுவீர்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை நிலவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். தன வரவு உண்டாகும். பல நாட்களாக தாமதப்படுத்த பட்ட கடன் தொகை கைக்கு வந்து சேரும். தங்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு இனிய நாளாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனமகிழ்ச்சியும் தன வரவும் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் மனதை செலுத்துவீர்கள் இவைகளில் வெற்றியும் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாக அமையும். நிர்வாகத்தை நம்பிக்கையை பெற்று விடுவீர்கள். குழந்தைகளால் மன நிம்மதி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -