இன்றைய ராசி பலன் – 30-5-2020

rasi palan - 30-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் வர வாய்ப்புகள் உள்ளது. திருமண போன்ற சுப காரியங்களுக்கு பேச்சுவார்த்தைகள் நடைபெறும். பணவரவு பொன் பொருள் சேர்க்கை போன்றவை ஏற்படும் இன்று உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக இருக்கும் நீங்கள் எதிர் பார்த்திருந்தால் வங்கிக்கடன்கள் கிடைக்கும் நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சுகமான நாளாக அமைய போகிறது. வீண் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நன்மைகள் உண்டாகும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள் உங்கள் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையான லாபமடைவீர்கள் கணவன்-மனைவி பிரச்சினைகள் தீரும் பணம் அதிக அளவு வந்தாலும் சுப காரியங்கள்ஆல் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாளாக இருந்து வந்த கடன் பிரச்சினைகள் தீரும் இந்த மாதம் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் அடைவீர்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மனஸ்தாபங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திடீர் பணவரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். உங்கள் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சின்னச்சின்ன பிரச்சினைகளும் மனக் குழப்பங்களும் ஏற்பட்டு நீங்கும். பெற்றோருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். உங்கள் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த கடன் உதவிகள் எல்லாம் கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை. பழைய நண்பர்களை பார்க்கும் வாய்ப்புகள் உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பயணம் செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை. எந்த ஒரு செயலை செய்தாலும் செயல்படுவது மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் வரவைக் காட்டிலும் செலவு மிகவும் அதிகமாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் பேசும் பொழுது கவனமாக இருக்கவும். வரவு வந்தாலும் செலவுகள் மிக அதிகமாகத்தான் இருக்கும். பேசும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. தொழில் செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் முதலீடு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். உங்கள் நண்பர்களாலும் உதவிகள் கிடைக்கும். பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் நல்லது. எந்த ஒரு செயலை செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் உடல்நிலை ஆரோக்கியம் தேவை. வியாபாரத்தில் லாபம் உண்டாகம். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். சக வியாபாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை. நண்பர்களின் சந்திப்பால் மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். தாயின் உடல்நிலை ஆரோக்கியம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பது மிகவும் நல்லது. பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வண்டி வாகனங்களில் கவனமாக இருக்கவும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் வரலாம். வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவது மிகவும் நல்லது வண்டி வாகனங்களை போகும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தந்தையிடம் மனக்கசப்புகள் ஏற்படலாம்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். காதல் விவகாரங்கள் கைகூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரவு அமோகமாக இருக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை தரும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்தயும். வேலையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் மூலம் புகழ் கிடைக்கும். எந்த ஒரு செயலை செய்தாலும் தடைகள் ஏற்படும். உங்கள் பிள்ளைகளின் மூலம் நல்ல செய்தி உண்டாகும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களால் பண உதவி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.