Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (31/05/2019): புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் ஆதாயமும் ஏற்படும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்ளவும். புதிய ஆடை ஆபரணங்கள் சேரும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

அரசாங்கக் காரியங்களில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

கடகம்:
Kadagam Rasi

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடமிருந்து சுப செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலருக்குப் புதியவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்குப் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் நன்மை உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனத்துடன் ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் சிறிய அளவில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

தனுசு:
Dhanusu Rasi

அரசாங்கக் காரியங்களில் பொறுமை அவசியம். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமை காப்பது அவசியம்.

மகரம்:
Magaram rasi

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாலையில் உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக அமையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்:
meenam

தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -