இன்றைய ராசி பலன் – 31-08-2020

rasi palan - 31-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டது எல்லாம் வெற்றியில் முடியும். சகோதரர்கள் மற்றும் மனைவியின் வழியிலும் ஆதாயம் உண்டாகும். கவலைகள் அகலும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வர வாழ்விலும் ஆரோக்கியத்திலும் ஏற்றம் தரும்.

- Advertisement -

ரிஷபம

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசி அதிபதியின் ஆதிக்கத்தால் பல நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் உபாதைகள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். பிறரிடம் அளவாக பேசுவது நல்லது. உடல் நலத்தில் அக்கறை அவசியம். ஆரோக்கியமான வாழ்வும் வளமும் பெற முருகனை வழிபட்டு வாருங்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு வாழ்வில் புது உத்வேகம் பெருகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். சுய தொழிலில் புதியதாக எதிலும் ஈடுபட வேண்டாம். விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்து வர வாழ்வில் மென்மை அடையலாம்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் கை கூடி வரும். எந்த செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் நிலவும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். தொழிலில் ஏற்றம் அடைய ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு செலவு குறையும், இன்னல்கள் அகலும். நினைத்தது நிறைவேறும். கடன் பிரச்சனை குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் குறையும். பெருமாள் வழிபாடு செய்து வர சுபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். எந்த செயலிலும் கவனம் தேவை. புது முயற்சிகள் வெற்றியடையும். புது உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வெள்ளி கிழமைகளில் ராகு பகவானை வணங்கி வாருங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆதாய மிக்க நன்னாளாக அமையும். புது முயற்சிகள் கை கொடுக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மன குழப்பம் ஏற்படும். கால பைரவரை வழிபட்டு வர வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நற்செய்தி பல ஏற்படும் நாளாக அமையும். பண செலவு அதிகரிக்கும். மாணவ‌ர்க‌ள் படிப்பில் கவனம் தேவை. அதிகம் கடன் கொடுக்கல் வாங்கல் நிலவும். குடும்பத்தினர் ஆதரவு பெருகும். வீண் வாகன செலவு ஏற்படும். குரு பகவானை வழிபட்டு வர நன்மை பெருகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது முடிவுகள் எடுக்கவும். முதலீடு செய்ய நல்ல பலன் தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவும். தந்தை வழி உறவுகளால் வீண் செலவு நிகழும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவர். அம்மன் வழிபாடு செய்து வர மன அழுத்தம் நீங்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ஏற்றம் அடையும். உடல் நலத்தில் அக்கறை அவசியம். கணவன் மனைவிக்கிடையே சிறு குழப்பம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிட்டும். பயணங்கள் அதிகரிக்கும். சிவனை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு வீண் செலவுகள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை அவசியம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கவனத்துடன் பேசுவது வீண் கோபத்தை தவிர்க்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வர சங்கடங்கள் நீங்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக அமையும். பழைய சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பண வரவு இருக்கும். மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். புது ந‌ண்ப‌ர்க‌ள் வழியில் நன்மை உண்டாகும். நவகிரக வழிபாட்டை செய்து வர செலவுகள் குறைந்து குடும்பத்தில் அமைதி நிலவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -