இன்றைய ராசி பலன் – 31-1-2021

rasi palan - 31-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இருண்டு உங்களுடைய பாதையில் புது வெளிச்சம் பிறக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் விடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை படிப்படியாக மாறி முன்னேற்றப்பாதையில் செல்லும் படியாக அமையும். எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று எதிர்பார்க்காத நேரத்தில் நடக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டது துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை அறியாமலேயே உங்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும். உத்யோகத்தில் இருந்தவர்களின் குழப்பங்கள் நீங்க பெரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புதிய முடிவுகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வீட்டில் கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல ஓடிக் கொண்டிருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு உறுதுணையாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். பிள்ளை வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. நீங்கள் விடுக்கும் வார்த்தைகள் மற்றவர்களை உங்கள் மேல் வெறுப்பை வரவழைக்கும் படியாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன குழப்பம் நீங்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை விட அதிகமாக சாதிக்கக்கூடிய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். உங்களைப் பற்றிய சுயமதிப்பீடு செய்து பார்ப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தம்பதிகளுக்குள் ஒற்றுமை மேலோங்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத லாபம் கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விதிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான பார்வை மாறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை மேலோங்கும். உறவினர்களின் வருகை மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியம் ஒன்று நிறைவேறக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிறகு கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த காரியங்கள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் வாங்கிய கடன்களை அடைக்க கூடிய வழிகள் பிறக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மூன்றாம் நபர்களின் நம்பி பணத்தை ஒப்படைப்பது நன்மை தராது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மனம் மகிழும் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பார்க்காத விஷயங்களில் காலதாமதம் ஏற்பட்டு டென்ஷனை கொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார நிலையை சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்