இன்றைய ராசி பலன் – 31-1-2020

rasi palan - 31-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகம் செய்பவர்கள் சக பணியாளர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. புதிய வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டு. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை பலப்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் காலதாமதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பைரவரை வழிபடுவது சிறப்பு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்களை தள்ளி வைப்பது நல்லது. பெண்களுக்கு வீட்டு பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான விஷயங்களில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் லாபம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கும். பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உண்ணும் உணவு பொருட்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் மன இறுக்கத்துடன் காணப்படுவீர்கள். தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுவார்த்தைகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் காணப்படும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு திருப்திகரமாக அமையும். புதிய தொழில் முயற்சிகள் அமோக வெற்றி பெறும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. கூட்டுத்தொழிலில் லாபகரமாக காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. நிர்வாகத்தினால் பாராட்டப்படுவீர்கள். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். மாணவர்களின் கல்வியில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகள் தீருவதற்குரிய குறிப்புகள் தென்படும். பொருளாதார பற்றாக்குறை நீங்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் காணலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் நாணயமாக நடந்து கொள்வீர்கள். மாணவர்களின் கல்வியில் ஏற்றம் இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அமோக வெற்றி பெறும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் காலதாமதமாக வாய்ப்புகள் உண்டு. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பார்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை நிச்சயம் அமையும். கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியாளர்களுடன் நட்புணர்வு கொள்வது நல்லது. விவாதங்களை தவிர்த்து இன்முகம் காட்டுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டில் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான திட்டமிடலில் இருப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் கல்வி பயில்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றமான நாளாக இருக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்கள் வெற்றி தரும். எம்பெருமான் ஈசனை வழிபடுவது சிறப்பு.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டு சோர்வுடன் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. புதிய தொழில் முயற்சி செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஏற்படும். கூட்டு தொழில் முயற்சிகள் பலன் தரும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அமோக வெற்றி பெறும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் காண்பீர்கள். வழக்குகள் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து அன்புடன் பழகுவது நல்லது.

தனுசு:
தனுசு ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சக பணியாளர்களால் பாராட்டப்படுவீர்கள். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிட்டும். வியாபாரம் செய்பவர்கள் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயமுண்டு. வெளியூர் அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையப்பெறும். இறைவழிபாடு நல்ல பலன் தரும். ஆன்மிக சுற்றுலா சென்று வருவதற்கான திட்டமிடல் பற்றிய சிந்தை உருவாகும். விநாயகரை வழிபடுவது சிறப்பு.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் அமோக வெற்றி பெறும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிட்டும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவற்றில் சாதகமான சூழ்நிலை நிலவும். புதிய தொழில் முயற்சிகள் பலன் தரும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கான சூழ்நிலை உண்டு. எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு குதூகலப்படுத்தும். புதிய தொழில் வாயப்புகள் அமையப்பெறும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வாகன வகையில் ஒரு சிலருக்கு சில பிரச்சனைகள் உருவாகக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டில் கல்வி கிடைப்பதற்கான யோகம் உண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் லாபகரமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். சமூகம் தொடர்பான விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். ஆதிசேஷனை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் சில பிரச்சினைகள் வந்து மறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். வீண் அலைச்சல்கள் மற்றும் வீண் விராயங்கள் வந்து மறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் நாவினால் சில பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு வருவீர்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலையில் கூடுதல் அக்கறை தேவை. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மூன்றாம் நபர்களை நம்பியிராமல் சுய முடிவு பலன் தரும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

- Advertisement -