இன்றைய ராசி பலன் – 31-12-2019

rasi palan - 31-12-2019

மேஷம்:
Mesham Rasi
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோக இடத்திலும், குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் தன்னம்பிக்கை உங்களது பலமாக அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளுக்கு வழிவகுக்கக் கூடிய நாளாக இருக்கும். உங்களது வாழ்வில் மாற்றங்கள் உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் அமைந்திருக்கின்றன. தெளிவான திட்டமிடலுடன் நீங்கள் கையாளும் எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாக அமையும். சிறப்பான நாளாக இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

மிதுனம்:
midhunam
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களது விருப்பப்படி வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தார் உங்களை புரிந்து கொள்வார்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வீண் விராயங்கள் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:
Kadagam Rasi
இன்றைய நாள் மன உளைச்சல் காரணமாக பலவீனமாக காணப்படுவார்கள். வரவை விட செலவு அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். உத்தியோகத்தில் கவனம் தேவை. பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும். கோபத்தை தவிர்த்து புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டால் இன்றைய நாள் சிறப்பாக அமையும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சேமிப்பின் அருமையை உணர்ந்து செயல்படுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். சமூக உணர்வு மேலோங்கி காணப்படும். அடுத்தவர்களின் நிலையை எண்ணி மனக்கலக்கம் அடைவீர்கள். உங்களது நேர்மையான சிந்தனை, இரக்ககுணம் ஆகியவை இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வருவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படாமலிருக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்:
virichigam
இன்றைய நாள் சுறுசுறுப்புடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் ஆற்றல் சிறப்பாக செயல்படும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. சிறு சிறு தவறுகள் நேரலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக காணப்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே ஒற்றுமையுடன் காணப்படுவீர்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் எதிர்பாராத தன வரவால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிட்டும். சுப நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. பணியிடத்தில் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் நேற்றைய இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடல் நலத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். கவனமாக இருக்கவும். விரயங்கள் உண்டாகலாம். இறை வழிபாடுகளில் கவனம் செலுத்துவது சிறந்த நாளாக அமைத்து தரும். தம்பதியரிடையே ஒற்றுமை நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான மனநிலையை உண்டாக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். தன வரவு திருப்திகரமாக இருக்காது. வீண் விரயங்களும் உண்டாகலாம். உஷ்ணம் காரணமாக உடல்நிலை கோளாறு ஏற்படலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பரபரப்புடன் காணப்படுவீர்கள். எதை முதலில் செய்வது என்ற குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை தேவை. எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சக பணியாளர்களிடம் நட்புடன் இருப்பது நல்லது.