இன்றைய ராசி பலன் – 31-3-2020

rasi palan - 31-3-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மூத்த அவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாள் ஆகும். நீண்ட நாளாக தாமதப்படுத்த பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும். அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். பெண்களுக்கு இனிமையான நாளாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். இவைகளில் வெற்றி உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மாலையில் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும். உயர் கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு மென்மையான நாளாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய தொழில் முயற்சிகளையும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் தவிர்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும் என்றாலும் சற்று கூடுதலான முயற்சிகள் தேவைப்படும். மீடியா போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

கன்னி

- Advertisement -

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாகவே அமையும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை பாதிக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள் என்றாலும் நிர்வாகத்தை நல்ல பெயர் கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. நீண்டநாள் எதிர்பார்த்த பணவரவு உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதாரப் பற்றாக் குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழிலில் மேன்மை அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாகும். வார்த்தையில் நிதானம் தேவை. கணவன் மனைவியின் ஒற்றுமை திடீரென உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதால் பொறுமையை கடைப் பிடிக்கவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத தனவரவு உண்டாகும். புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகவே இருக்கும். விசா தொடர்பான காரியங்களில் துவங்குவதற்கு இன்றைய நாள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருந்துவரும். கணவன் மனைவி உறவு ஒற்றுமையாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியை உண்டாக்கும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது குடும்ப நிம்மதியை பாதுகாக்கும். சகோதர சகோதரிகள் வர வாய்ப்புண்டு என்பதால் அமைதி காக்கவும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலான கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்டநாளாக தாமதப்படுத்த பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். ஒருசிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். பெண்களுக்கு இனிமையான நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பொருளாதார பற்றாக்குறையை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும் இருப்பினும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -