இன்றைய ராசி பலன் – 4-08-2020

rasi palan - 4-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை அளிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதை சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகளின் கல்வியிலும் மனைவியின் உடல் நிலையிலும் அதிக அக்கறை தேவை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக இருப்பீர்கள்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். கூட்டு முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களுடைய வருமானம் உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நீங்கள் எதிர்பார்த்த பண தேவைகள் பூர்த்தி அடையும். எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். குழந்தைகளின் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. பூர்வீக சொத்துக்கள் முடிவுக்கு வரும். சொந்த தொழிலில் வெற்றி காண்பீர்கள்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களால் நன்மை உண்டாகும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உங்களை பிரிந்தவர்கள் உங்களிடம் வந்து சேரும் வாய்ப்புகள் உள்ளது. கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமாக நாளாக அமையப் போகின்றது. தாய் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. பழைய பாக்கி கடன்களை சுமுகமாக பேசி வசூலிப்பீர்கள். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிக அளவில் ஏற்படலாம். ஒவ்வாத உணவு உட்கொள்வதால் சிறிது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்களுடைய பேச்சால் சிறிது மனக்கசப்பு ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சந்திப்பவர்கள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணப் பேச்சுகள் கைகூடும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகளால் ஆதாயமடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புகழ் உண்டாகும் நாளாக அமையும். உங்கள் வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் அதிகம் காட்டுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு நல்ல செய்தி வர வாய்ப்புகள் உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சி கூடும் நாளாக உள்ளது. பணவரவு தாராளமாக இருக்கும். நீங்கள் வீடு மனை எந்த முயற்சிகளில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சிந்தனைகளால் பல வெற்றிகளை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நல்லமுறையில் நிறைவேறும். பகைவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்படுவது மிகவும் நல்லது. சிறிது அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இடமாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் வரவு உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அனுசரணையாக இருப்பீர்கள். யாரையும் எதற்காகவும் நம்பிவிட வேண்டாம். உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் மனத் துணிச்சலுடன் இருப்பீர்கள். அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -