இன்றைய ராசி பலன் – 4-12-2020

rasi palan - 4-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு குடும்பத்தார் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் மூலம் பெருமை கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சாதுர்ய திறமையால் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். பெண்களுக்கு புதிய முயற்சிகள் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பயணங்களால் மாற்றங்களை சந்திப்பீர்கள். ஒருசிலருக்கு திடீர் பணவரவு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். உத்தியோகத்தில் நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கை கொடுக்கும் வகையாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பணத்தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் அப்படியே நடக்கும். பெண்களுக்கு தடைகள் விலக கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் சற்றே அனுசரித்து சென்றால் மன அமைதி பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சோர்வு உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபச் செய்திகள் மற்றும் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு. புதிதாக துவங்கும் காரியங்கள் தடையின்றி கைகூடி வரும். வீடு மனை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு வாய்க்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு சாதுர்ய திறமையால் லாபம் காண்பீர்கள்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் புரிதல் உண்டாகும். இனம் புரியாத மகிழ்ச்சியை உணர்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான திடீர் பயணங்கள் மூலம் தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்புதிய சிந்தனைகள் பிறக்கக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. திருமண பந்தத்தில் இணைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். தொழில்ரீதியான கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுக்கு உங்கள் மேல் உள்ள அதிருப்தி நீங்கப் பெறும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் பன்மடங்கு பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்கள். பெண்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கிய ரீதியான விஷயங்களில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் வீண் விரயங்களை தவிர்க்கலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார நிலை சீராகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் பணிச்சுமையை கூட்டும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி உருவாக வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் நிம்மதியும், அமைதியும் நிறைந்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல் நெருக்கத்தை உருவாக்கித் தரும். பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையால் புதிய வாய்ப்புகளை பெறுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய சற்று சிரமப்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமண முயற்சிகள் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும். உங்கள் திறமையை அதிகரிப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சக பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது முன்னேற்றத்தை தரும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. பயணங்களில் கவனமாக இருப்பது உத்தமம். குடும்பத்தில் இருப்பவர்களின் கனிவான பேச்சால் மனநிம்மதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் மேல் வீண் பழிகளை சுமத்துவதற்கு வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணவரவில் சிக்கல்கள் நீடிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.