இன்றைய ராசி பலன் – 4-2-2021

rasi palan - 4-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய அணுகுமுறை மற்றவர்களை கவரும் விதமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை. குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் கண்களால் பார்த்து மட்டும் முடிவு செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு கிடைப்பதில் தொடர்ந்து பிரச்சினைகள் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி இடையே ஒற்றுமை தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஒப்படைக்கப்படும். கொடுத்த பொறுப்புகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு கீழ் பணிபுரியும் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது முன்னேற்றத்தை கொடுக்கும்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாட்டிற்குரிய ஆர்வம் உங்களுக்கு அதிகரித்து காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருந்தாலும் கூடுதல் பணிச்சுமை இருக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே நடக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் சாதகமாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே சிறு ஊடல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியமாகும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த பணம் திரும்ப வசூலாவதில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறு ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க போராடுவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளை வழி மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் போராட்டம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவது தான் நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகளை சுமப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும் என்பதால் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சிறப்பாக அமைய இருக்கிறது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார்? கெட்டவர்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகிறார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பமான மனநிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி போதிய லாபம் காணலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தினால் ஆரோக்கியத்தில் வளம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகள் பிறக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -