இன்றைய ராசி பலன் – 4-4-2020

rasi palan - 4-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். வாகனம் வகையில் ஆதாயம் உண்டு. புது தொழில் முயற்சிகள் வெற்றிகள் கிடைக்கும். புதிய வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக அமையும். தந்தைவழி சொத்துக்கள் சற்று நெருங்கி வருவதற்கான காலமாகவும் இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையக் கூடும். புது தொழில் முயற்சிகள் வெற்றிதரும் உறவினர் களால் மகிழ்ச்சியும் தன வரவும் உண்டாகும். சுப காரியங்களைப் பற்றிய செயல்பாடுகள் வெற்றியை தரும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு தீர்வுக்கு வரும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மொத்தத்தில் மாணவர்களின் கல்வி மேம்படும். உடல் நலம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் சற்று அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. தொழில் சம்பந்தமாக கல்வி தொடர்பாகவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் என்று என்னால் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையட்டும். பெரியோர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றியைக் காணும் நேரம். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தனவரவு உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மேல் நிலைக்கு வருவர். தன வரவு இருந்தாலும் செலவினங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக இருந்து வரும். ஒரு சிலருக்கு உடல் நிலையில் சிறிய அளவில் பாதிப்புகளும் ஏற்பட கூடும். எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகளும் குழப்பங்களும் சற்று மன நிம்மதி அற்ற நிலையில் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும். பேச்சில் நிதானம் தேவை. புது தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பத்தாருடன் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தருவதாகவே அமையும். தனவரவு உண்டு. இருப்பினும் பற்றாக்குறை இருந்து வரும். புதிய தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்று அமையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். சொந்தத் தொழில் செய்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பர். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். புதிய பிரயாணங்கள் மற்றும் புதிய தொழில்களை பற்றிய திட்டமிடுதல் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்தவர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உதவிகளும் ஆதாயங்களும் உண்டாகும். குடும்பத்தில் மூத்தவர்கள் ஒற்றுமை சிறப்பாக இருந்துவரும். மாணவர்களின் கல்வி நல்ல நிலையில் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல நல்ல பலன்கள் வரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புதிய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சி போன்றவை உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று அலைச்சல்கள் உடன் கூடிய நாளாக இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். தூக்கம் சற்று மாறுபடும் வாய்ப்புகள் உண்டு. தொழில் விருத்தி நன்றாக இருக்கும். குடும்பத்தில் மூத்தவர்கள் உடன் அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமைய போகிறது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தனவரவு உண்டு. மாணவர்களின் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பானதொரு நாளாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் நலம் சீராக இருந்துவரும். ஒரு சிலருக்கு இடமாற்றத்தை பற்றியோ அல்லது சொத்து வாங்குவது மற்றும் விற்பது பற்றி பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையும். குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் அலைச்சலும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. நாளின் பிற்பகுதியில் குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் இனிமையாக அமையும். புதிய உச்சத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள். கூடுதல் பணிச் சுமையை கொடுத்தாலும் வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தவர்களுடன் சற்று மனக் கசப்பு வரும் வாய்ப்புகள் உள்ளது. எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். தொழில்துறையில் ஈடுபட்டவர்களுக்கு லாபம் சிறிது அதிகமாக இருக்கும். சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளித்து விடுவீர்கள். மென்மையான மனதை கொண்டவர்களாக இருப்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.