இன்றைய ராசி பலன் – 4-5-2020

rasi palan - 4-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியங்களில் அனுகூலமான நாளாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுகளும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் அனுகூலமான நாளாக இருக்கும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்பு நிறைந்து காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன தைரியத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சியால் சில காரியங்கள் தடைபடலாம். அதிகமாக இருக்கும் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மனைவிவழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குல தெய்வ வழிபாடுகளால் அனுகூலம் கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்படக்கூடிய நாளாக இருக்கும். கோபத்தை குறைத்துக் கொள்வதால் எதையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வதும் நல்லது. அரசாங்க விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் இருப்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரர்கல் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக லாபம் கிடைக்கும். இளைய சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில சங்கடங்களை சமாளிக்க வேண்டியிருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்களுடன் பேசும்போது மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நண்பர்களுடன் பழகும் பொழுது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது. பணத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடும் மகிழ்ச்சியை தரும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் சில பிரச்சினைகள் வந்து சில பிரச்சினைகள் வரக்கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். சிலருக்கு திடீர் பணவரவுகள் எதிர்பார்க்கலாம். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும். எதையும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். தந்தையிடம் இருந்து வந்த சில பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கும். வாழ்க்கை துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார். கணவன் மனைவியும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல இருக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு தனி மரியாதை உண்டு. நீங்கள் எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றியைக் காண்பீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதாயம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் பொழுது கவனமாக இருப்பது மிகவும் நல்லது. இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சியை தரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில அலைச்சல்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல்கள் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். இன்று நீங்கள் பணத்தை செலவிடுவதில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. நீங்கள் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிறுவயது நண்பர்களை காண நேரிடும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரங்களில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உங்கள் சாமர்த்தியத்தால் அதை சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்பொழுது பதற்றம் இல்லாமல் நிதானமாக பேசுவது மிகவும் நல்லது. எந்த செயலை எடுத்தாலும் அதில் வெற்றி அடைவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.