இன்றைய ராசி பலன் – 5-08-2020

rasi palan - 5-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் வெற்றியில் முடியும். திருமண சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் தனிநபராக முடிவெடுப்பது நல்லது அல்ல. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு பக்க பலமாக இருக்கும். பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தெம்பும் தைரியமும் உங்களுக்கு இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையேயான உறவு சுமுகமாக இருக்கும். இருவரும் தனிமையில் மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். எதிர்பாராத வகையில் பணவரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும்.

- Advertisement -

கடகம

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய தொழில் முறை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடிய இனிய நாளாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கி குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தாமத பலனே கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கொடுக்கும் தொல்லையால் கவலையுடன் காணப்படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் உண்டு.மாணவர்கள் கல்வியில் புதிய விஷயங்கள் கற்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட கூடிய நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை தொடங்குபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் இருக்கும்.கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் விரைவில் தானாகவே சரியாகிவிடும். எண்ணங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். வெளியூர் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய தைரியமும் மேலோங்கி இருக்கும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக அமைய இருக்கிறது. திருமண சுபகாரிய முயற்சிகள் தாமதமானாலும் வெற்றியில் முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பெரிய மகான்கள் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைத்த உற்சாகத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருக்கும் நபர்களின் உதவியால் புதிய முயற்சிகளை மேற் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இடமாற்றம் மற்றும் பணவரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய விஷயங்களை மேற் கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு அமையும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிய கூடும் பேச்சில் நிதானமும் கவனமும் இருப்பது நல்லது. கல்வியில் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அற்புதமான அமைப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் சந்தித்து பின்னர் வெற்றியில் முடியும்.மூன்றாம் நபர்களிடமிருந்து சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து விடுவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் மன நிம்மதியான சூழ்நிலை இருக்கும்.இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். பெண்கள் உள்ளம் நிகழக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தன்னம்பிக்கை வளரும். அம்பிகையை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -