இன்றைய ராசி பலன் – 5-11-2020

rasi palan - 5-11-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சற்று எச்சரிக்கை தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதில் நன்றாக யோசிக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. அது போல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியான முன்னேற்றம் மந்தநிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்கிற டென்ஷன் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் தன்னம்பிக்கையுடன் எடுப்பீர்கள். சில நாட்களாக உங்களால் முடியுமா? முடியாதா? என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியம் ஒன்று முடியும் என்கிற நம்பிக்கையுடன் செயலாற்றி விடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்.

கடகம்கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியமான போட்டிகளில் ஈடுபட நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கொடுக்கல்-வாங்கலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் உண்டாகும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் அமையும். பொறுமையைக் கடைப்பிடித்தால் மன அமைதியுடன் இருக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் இழுப்பரியில் இருந்த கடன் தொகைகள் படிப்படியாக குறையும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உங்களை பலரும் உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள். கோபமாக வார்த்தைகளை விடும் முன் யோசித்து விடுவது நல்லது. தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும். முடியவே முடியாது என்று நினைத்த காரியம் கூட சுலபமாக முடிந்திருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. சாதகமற்ற கிரக அமைப்பு என்பதால் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் தொடங்குவதில் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்தும் திறமையை சிறப்பாக கையாளுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. வெளி நபர்கள் அல்லது குடும்ப நபர்கள் யாரிடமும் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். உங்களுடைய முன்கோபத்தால் தேவையற்ற பிரச்சினைகளையும், இழப்புகளையும் சந்திக்க நேரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படும். பெண்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -