இன்றைய ராசி பலன் – 5-5-2020

rasi palan - 5-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபமான ஒரு நாளாக அமையும். வாகனம் வண்டி மற்றும் உணவுப் பொருள் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சுபகாரியப் பேச்சுக்கள் இனிதே நிறைவேறும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியை தரும். இரும்பு தொழில் தொழில் செய்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு நாளாக அமையும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதையும் வர வாய்ப்புகள் உண்டு. உணவு பொருட்களில் கவனம் செலுத்துவது மிகவும் நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் இருப்பவர்களுக்கு நல்லதொரு நாளாக அமையும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமிகு காலமாகும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று அலைச்சல்கள் இருந்தாலும் வெற்றிகரமாக முடியும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக விளங்கும். கடன் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு கடன் உதவி கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை மனதில் ஆட்கொள்ளும். கல்விச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. பணப் பற்றாக்குறை இருந்து வந்தாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பெற்றோர்களிடம் மதித்து நடப்பது மிகவும் நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் தொடர்பான காரியங்களில் சிறிது காலதாமதம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். புதிய விபத்தில் உயர்வுக்கான வழிமுறைகள் ஏற்படும். திருமணம் தொடர்பான சுப காரியங்கள் இனிதே நடைபெறும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையாக இருப்பது மிகவும் நல்லது. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நகை மற்றும் சொத்து விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இன்று அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான ஒரு நாளாகும். ஆயிரம் கவலைகளும் கஷ்டங்களும் இருந்தாலும் நல்லதொரு துவக்கம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆபத்தை ஈட்டுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் வேலை நன்றாக செல்லும். தெய்வ காரியங்கள் மகிழ்ச்சியைத் தரும். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு நல்லதொரு நாளாக இன்று நாள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக அமையும். ஆயிரம் கவலைகளும் கஷ்டங்களும் இருந்தாலும் நல்லதொரு தொடக்கமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு சிறு தடைகள் ஏற்பட்டாலும் வேலை நன்றாக செல்லும். சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறப்பாக முடிப்பார்கள். சொத்து சம்பந்தமான முடிவுகள் ஈட்டுவீர்கள். திருமணம் காரியங்கள் மற்றும் சுப காரியங்கள் மகிழ்ச்சியை தரும். புதிய தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தங்களுடைய முயற்சிகளில் வெற்றியைத் தரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான ஒரு காலமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெருமை உண்டாகும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாக இருக்கும். குடும்பத்தில் மன மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். எதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். திருமணம் காரியங்கள் சுப காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்துசேரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். கடன் பிரச்சினைகளில் ஒரு சில மன வருத்தங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல செய்திகள் வந்துசேரும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். புதிய தொழிலில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பார்கள். உடல் நலம் சீராக இருந்துவரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும். எதிர்பார்க்கும் கல்லூரிகளில் அல்லது உயர் கல்விக்கான இடங்கள் கிடைக்கும். எதிலும் ஆலோசித்து செயல்படுவது மிகவும் நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.