இன்றைய ராசி பலன் – 6-08-2020

rasi palan - 6-8-2020
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு சிறந்த நாளாக அமைய இருக்கிறது. வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் ஒரு சிலருக்கு கிடைக்கப் பெறும்.குடும்பத்தில் இருக்கும் நபர்களால் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் தொல்லைகள் வந்து சேரும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நிலுவையில் இருக்கும் கடன் தொகைகள் கழுத்தை நெறிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை தைரியத்துடன் எதிர்கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு உருவாகும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு நீங்கள் உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பின்பு தானாகவே நீங்கிவிடும். சுயதொழில் செய்பவர்களுக்கு வேலையில் அதிகம் டென்ஷன் மற்றும் அலைச்சல் உண்டாகலாம்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய உத்வேகத்தை தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். பொருளாதாரத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். பத்திரிக்கை துறையை சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திறமைக்கேற்ப அங்கீகாரம் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும்.நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பல விஷயங்கள் வெற்றிகரமாக நடப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபம் தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை சீர்குலைவு அதற்கான அமைப்பு என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே தேவையற்ற நபர்களால் சிக்கல்கள் உருவாகக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தை பொருத்தவரை ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி மன நிம்மதியை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. புதிய தொழில் முயற்சிகளை மேற் கொள்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இல்லத்தில் சுப செய்திகள் கிடைக்கப்பெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. புதிய விஷயங்களை கையாள்வதில் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுப்பது நல்லது.உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களின் நிர்வாகத் திறமையால் மேல் அதிகாரி களால் பாராட்டப்படுவீர்கள். பத்திரிகை துறையில் பணிச்சுமை அதிகம் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க கூடிய இனிய நாளாக இருக்கும்.அவர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் தைரியம் உங்களுக்கு கிடைக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். எனவே உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் டென்ஷன்கள் இருக்கக்கூடிய அனுகூலமற்ற நாளாக இருக்கிறது. பிரயாணங்களின் போது உடைமைகள் மீதும் பிள்ளைகளின் மீதும் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வாகன வகையில் ஆதாயம் கிடைக்க கூடிய நாளாக இருக்கும். உடல்நல பாதிப்புகள் படிப்படியாக நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் தரும். சுய தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். கடன் சுமை குறைவதற்கு உரிய சாத்தியக்கூறுகள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இல்லத்தில் நல்ல தகவல்கள் கிடைக்க கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சாதகமான பலன்களைத் தரும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சுமுகமாக இருக்கும். பெரிய தொகையை எதிலும் ஈடுபடாமல் இருப்பது மன நிம்மதியை தரும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -