இன்றைய ராசி பலன் – 6-1-2021

rasi palan - 6-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வெடிக்கும் முடிவுகளால் சாதகப் பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனே நீங்கிவிடும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாகும். கணவன் மனைவி பிரச்சனை நீங்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு செயலையும் நிதானமாக செய்வதன் மூலம் நன்மைகள் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். விட்டுக் கொடுத்து சென்றால் கெட்டுப் போக மாட்டீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடை தாமதங்கள் நீங்கி உங்கள் பக்கம் வெற்றி திரும்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் நிதானம் இருப்பது மன அமைதியைக் கொடுக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுய முடிவு எடுப்பது நன்மையை அளிக்கும் வகையில் இருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் கவனம் செலுத்தினால் நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்கள் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக வாடிக்கையாளர்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க சந்தர்ப்பங்கள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்தி வரும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இல்லம் தேடி நல்ல செய்திகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும் என்றாலும் கூடவே செலவுகளும் வந்து விடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறைந்த லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. வசூலாகாத பழைய பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். உங்களை அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். இரக்க சுபாவம் உள்ள உங்களுக்கு நன்மைகள் பலவும் நடைபெறக்கூடிய நல்ல நாள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்ட முதலீடுகளை விரைவாக மீட்டு எடுத்து விடுவீர்கள். ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். திறமைக்கு உரிய அங்கீகாரம் பெற கூடுதலாக முயற்சி செய்வீர்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயலாற்ற கூடிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. உங்களுடைய முன்கோபத்தால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கடன் பிரச்சனையில் இருந்து மீள்வதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் திடீர் பண வரவால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி உண்டாகும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் செயலாற்றக்கூடிய அனுகூல பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் என்றாலும் மந்த நிலை காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நன்மை தரும் வகையில் இருக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்