இன்றைய ராசி பலன் – 6-4-2020

rasi palan - 6-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாளாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல்நிலை அடைவார்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருந்தாலும். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்று கொள்வார்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகும். கலைத்துறை பத்திரிக்கை துறை எழுத்துத் துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு ஏற்ற மிக நாளாகும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நல்ல நாள் ஆகும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் வெற்றி அடைவார்கள். பெண்களுக்கு ஏற்ற நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். உத்யோகம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். புதிய தொழில் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தனவரவு கூடிய லாபகரமான நாளாகவே இன்றைய நாள் அமைகிறது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாகும். வெளிநாடுகளில் பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வு உண்டாக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கல்வி செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. உயர்கல்வி பயின்று கொண்டிருப்பவர்கள் சற்று கூடுதல் கவனம் தேவை.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதை தாமதப்படுத்தி செய்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகளும் வீண் அலைச்சல்களும் உண்டாக வாய்ப்பு உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு முடிவினை எட்டுவதற்கு சற்று காலதாமதம் ஆகும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாள் ஆகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவி உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புத் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது என்றாலும் நன்மை கிடைக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களை செய்யும் நாளாக அமையும். தம்பி தங்கையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணும் நல்ல நாளாகும். உடல்நலம் நன்றாக இருந்துவரும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்வீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக் கொள்ளவும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ளவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். ஒரு சிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் மொத்தத்தில் அமைதியான நாளாகவே இந்த நாள் அமையும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உருவாக அடித்தளம் அமைப்பீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும் என்பதால் வார்த்தையில் நிதானம் தேவை. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களையும் முன்னேற்றத்தை காண்பீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருமணத்திற்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற அடிப்படையான செயல்கள் இன்று துவங்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். உங்களுடைய கடின முயற்சிக்கு அங்கீகாரமும் நிர்வாகத்தில் நல்ல பெயரும் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.