இன்றைய ராசி பலன் – 6-5-2020

rasi palan - 6-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி அளிக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத பணவரவு கூட உங்கள் கைகளில் வந்து சேரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தடை நீங்கும். கடன் கேட்டால் எவ்வளவு வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். நிச்சயமாக நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பணத்தை சிக்கனமாக செலவு செய்வது மிகவும் நல்லது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணத் தடை நீங்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்கு உயர்கல்வி நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திருமணத்தில் இருந்த தடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பது மிகவும் நல்லது. சகோதரர்களால் உதவிகள் கிடைக்கும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றி வீர்கள். நீண்ட நாளாக இருந்து வந்த பிரார்த்தனைகள் நிறைவேறும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமையாக நன்றாக இருப்பார்கள். குடும்பத்தில் அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய ஆடை ஆபரணம் சேர்க்கைக்கு வழி உண்டாகும். சுற்றுலா மற்றும் பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருக்கும். எதிர்காலத்தைப் பற்றி கவலையாக இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் சரியாகிவிடும் என்று மன தைரியத்துடன் இருப்பீர்கள். குடும்பத்தில் சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை சற்று பிரச்சனை உடன் இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குழந்தைகள் கல்வியில் மேல்நிலையை அடைவார்கள். எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியை தரும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்வு கிடைக்கும். உறவினர்கள் இல்லங்களில் சுபகாரியம் நிகழ்வுகள் நிகழும். சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்கு திட்டமிடுவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்ப ஒற்றுமை மேம்படும். மனைவி உறவு அந்நியோன்யமாக இருக்கும். சொந்தத் தொழில் ஆதாயம் தருவதாக அமையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கூட்டுத் தொழில் ஆதாயம் தருவதாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பெண்களுக்கு தேவையான ஆடை ஆபரண சேர்க்கை நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய இடமாற்றங்களும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் ஏற்படக்கூடும். சேவைத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகையில் ஆதாயம் கிடைப்பதாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி காணும் நாளாக இன்றைய நாள் அமையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் குறைத்து கொள்வது மிகவும் நல்லது. காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகள் உண்டு. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டிய நாள் ஆகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஜெயம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையும் அவர்களால் செலவுகளும் உண்டாக வாய்ப்புகள் உண்டு. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தாய்நாட்டைப் பற்றிய சிந்தனை இருக்கும். உங்களுடைய திறமையை காட்டும் நேரமாக அமையும். கலைத்துறை பத்திரிகைத்துறை மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிகபட்ச அலைச்சல்கள் கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். பாடத்தில் கூடுதல் கவனம் தேவை. குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமண முயற்சிகள் வெற்றியடையும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். தொழில்துறை முன்னேற்றத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். காதல் வலையில் விழுந்திருப்பது இனிமையான நிகழ்வுகள் உண்டாகும். புதிய நண்பர்கள் அதிகமாவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தாய்நாடு மற்றும் சொந்தங்களை பற்றிய சிந்தனைகள் அதிகமாக வந்து செல்லும். சேவைத் தொழில் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக நல்ல நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சுபகாரியங்கள் மற்றும் திருமணம் காரியங்கள் வெற்றியில் முடிவதாக அமையும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். ஊதிய உயர்வு இருக்கும் சுற்றுலாத்துறை வனத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமைகள் புலப்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.