இன்றைய ராசி பலன் – 6-7-2020

rasi palan - 6-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். வணிக துறையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தின் நிதி நிலைமைகள் குறித்து சிறிது கவலை அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நீங்கள் சிறிது நிதானமாக இருப்பது நல்லது. வார்த்தையில் கவனம் தேவை. உங்களுடைய எதிர்காலம் குறித்து திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்கும் அனைத்து வேலைகளும் சிறப்பாக முடிவடையும். குடும்ப உறவினர்கள் உடன் நிதானப் போக்கை மேற்கொள்ளவும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக முடியும். பெரியோர்களை மதித்து நடப்பது நன்மை தரும்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சிறிது வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். வியாபாரம் மந்தமாக இருக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் சஞ்சலங்கள் மாறி உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பீர்கள். வணிகத்துறையில் உங்களின் எதிர்பார்ப்பு ஏற்ப பணவரவு அதிகரிக்கும். மனைவியின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சனைகள் வந்து நீங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு கடந்தகால கசப்புகளை மறந்து புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பீர்கள். உங்களின் கற்பனைக்கு ஏற்றவாறு அமையும். உடல்நிலையில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது நல்லது. நீண்டநாளாக வராத பணம் வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரசின் பணிகள் சுமுகமாக முடிவடையும். உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் உயரும். உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நாளாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் உங்களுக்கு நிச்சயம் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத தனவரவு இருப்பதால் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி படிப்படியாக அன்பு அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயம் தொடர்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு உரிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வாழ்க்கை இயல்பாக இருந்தாலும் மன சஞ்சலத்துடன் இருப்பீர்கள். வேலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களுடன் பழகும் போது சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தொழிலில் சில புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். கல்வி மற்றும் போட்டிக்கான முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது. காதல் விஷயங்கள் அனைத்தையும் சுமுகமாக முடியும். திருமணம் போன்ற சுப செய்திகள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் வேறுபாடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்று உங்களுக்கு பயணம் செய்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உறவினர்களிடம் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது. வீண் விவாதம் தவிர்க்க வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் மாற்றத்தை காண்பீர்கள். சிலர் உங்களை ஏமாற்றும் வாய்ப்புகள் உள்ளதால் பொருள்களை பத்திரப்படுத்துவது நல்லது. ஆடை ஆபரணங்கள் வாங்கும் அதிர்ஷ்ட நாளாக இன்று உங்களுக்கு அமையும். உங்களுடைய பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -